தொலைத்தொடர்பு அலுவலகத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் திடீர் சோதனை

posted in: மற்றவை | 0

புதுடில்லி:மத்திய லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், டில்லியில் உள்ள தொலைத்தொடர்புத் துறை அலுவலகமான சஞ்சார் பவனில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.இதுதொடர்பாக சி.பி.ஐ., தகவல் தொடர்பாளர் கூறியதாவது:

இதயம் இருக்கா?: கொடி நாள் நிதியிலும் சுருட்டல்; கொடுமைக்கு அளவே இல்லை

posted in: மற்றவை | 0

கோவை: கோவையிலுள்ள வட் டார போக்குவரத்து அலு வலகங்களில் விண்ணப் பதாரர்களிடம் கொடி நாள் நிதி வசூலிக்கப்படுகிறது. இதில், முறைகேடு நடப்பதாக புகார் எழுந்துள்ளது. கோவையில் வடக்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதி வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள் ளன. எல்.எல்.ஆர்., மற் றும் டிரைவிங் லைசென்ஸ் பெற வருவோரிடம் “கொடி நாள்’ நிதி வசூலிக்கப்படுகிறது.

தீபாவளியையொட்டி அதிக வசூல் பார்த்த மதுரை அரசு போக்குவரத்து கழகம்: ஒரே நாளில் ரூ. 4.40 கோடி கிடைத்தது

posted in: மற்றவை | 0

மதுரை: தீபாவளியையொட்டி அரசு போக்குவரத்துக் கழகங்கள் ஏராளமான சிறப்பு பஸ்களை இயக்கின. இதில், மதுரை மண்டலம் அதிகபட்சமாக 4.40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தீபாவளியையொட்டி தமிழகம் முழுதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் அனைத்து பஸ்களையும் சிறப்பு பஸ்களாக ஆக்கி, அதிக கட்டணத்துடன் இயங்கின.

டி.ஆர்.பாலு தலைமையில் திமுக அணி எம்.பி.க்கள் இன்று இலங்கை பயணம்

posted in: மற்றவை | 0

இலங்கையில் தமிழர்களின் நிலை குறித்து உண்மையைக் கண்டறிவதற்காக திமுக அணியைச் சேர்ந்த எம்.பி.க்களில் 10 பேர் அங்கு சனிக்கிழமை செல்கின்றனர்.

மீண்டு’வந்த மதுரை மாநகராட்சி நகரமைப்பு அலுவலர்

posted in: மற்றவை | 0

மதுரை : கடத்தப்பட்ட மதுரை மாநகராட்சி முதன்மை நகரமைப்பு அலுவலர் முருகேசன் நேற்று இரவு கடத்தல்காரர்களிடமிருந்து “மீண்டு’ வந்தார். முருகேசன் நேற்று காலை “வாக்கிங்’ சென்றபோது ஒரு வேனில் வந்த மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.

செய்தி ஆசிரியர் லெனினை வலுக்கட்டாயமாக கைது செய்தனர் – தினமலர்

posted in: மற்றவை | 0

சென்னை: செய்தி ஆசிரியர் லெனினை போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்ததாக தினமலர் தெரிவித்துள்ளது. நடிகர் சங்கம் கொடுத்த புகாரின் அடிப்படையில் தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் நேற்று மாலை திடீரென கைது செய்யப்பட்டார்.

ஆந்திராவை உருக்குலைத்த வெள்ளச் சேதம் ரூ.12 ஆயிரம் கோடி

posted in: மற்றவை | 0

ஐதராபாத் : ஆந்திராவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு காரணமாக, 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. முக்கிய அணைகளில் இருந்து கட்டுக்கடங்காத அளவுக்கு தண்ணீர் வெளியேற்றப்படுவதால், விஜயவாடா மற்றும் 400 கிராமங்கள் தொடர்ந்து தண்ணீரில் மிதக்கின்றன.

சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் நூலிழையில் விபத்திலிருந்து தப்பியது

posted in: மற்றவை | 0

ஆந்திராவில் வெள்ள சேதத்தை பார்வையிட முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் உயரமான கட்டிடத்தின் மீது மோதும் அளவுக்கு நெருங்கிச் சென்றது. பைலட் அதிரடியாக செயல்பட்டு சட்டென திருப்பியதால் பயங்கர விபத்து தவிர்க்கப்பட்டது. நாயுடு ஆபத்தின்றி தப்பினார்.

நடுவானில் விமானம் பறக்கும்போது பைலட்டுக்கும் பணியாளர்களுக்கும் மோதல்: கதிகலங்கினர் பயணிகள்

posted in: மற்றவை | 0

ஷார்ஜாவிலிருந்து டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில், பைலட்கள் மற்றும் விமான பணியாளர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பயணிகள் கதிகலங்கினர்.