பொக்ரான்-2 அணுகுண்டு சோதனை குறித்து விசாரணை வேண்டும்: விஞ்ஞானி சந்தானம்

posted in: மற்றவை | 0

கடந்த 1998-ம் ஆண்டு பொக்ரானில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனை எந்த அளவுக்கு வெற்றி அடைந்தது என்பது குறித்து நடுநிலைக் குழு மூலம் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டிஆர்டிஓ) முன்னாள் விஞ்ஞானி கே. சந்தானம் விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

அதிகரிக்கும் அனாவசியமான அரசு விடுமுறைகள்

posted in: மற்றவை | 0

அரசு ஊழியர்களுக்கு சனி, ஞாயிறு தவிர, ஆண்டுக்கு 25 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டும், கூடுதலாக ஆந்திர முதல்வர் மரணம் போன்றவற்றுக்காக அவ்வப்போது விடுமுறை அளிப்பதால், அரசுப் பணிகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. மற்ற ஊழியர்களைப் போலவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, வாரம் ஒரு நாள் தான் விடுமுறை விடப்பட்டு வந்தது. வேலை நாட்களில், அலுவலகங்களில் ஆகும் … Continued

மதுரை மேலூர் அருகே கோயிலுக்குள் அம்மனாக குடிபுகுந்த சிறுமிகள்

posted in: மற்றவை | 0

மேலூர் அருகே ஏழை காத்த அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று நடந்த நிகழ்ச்சியில் அம்மன் அலங்காரத்தில் இருந்த 73 சிறுமிகளில் 7 பேரை தேர்வு செய்து பூசாரி கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.

ஹிதேந்திரன் இதயம் பொருத்தப்பட்ட சிறுமி சாவு

posted in: மற்றவை | 0

ஹிந்திரன் இதயம் பொருத்தப்பட்ட பெங்களூர் சிறுமி, துரதிர்ஷ்டவசமாக நேற்று இறந்தாள். பெங்களூரை சேர்ந்தவர் சேகர், டெக்ஸ்டைல் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி மஞ்சு. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். மூத்த மகள் அபிராமி (9). இவள் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தாள். அதற்காக சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாள்.

அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் இறங்கிய இடத்தில் பெரிய வளையம்- கண்டுபிடித்த சந்திரயான்-1

posted in: மற்றவை | 0

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் அமெரிக்காவின் அப்பல்லோ 15 விண்கலம் இறங்கிய இடத்தைச் சுற்றி பெரிய வளையம் காணப்படுவதை சந்திரயான்-1 விண்கலம் புகைப்படம் எடுத்துள்ளது.

ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி சேதம்

posted in: மற்றவை | 0

ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டியை சோதனை செய்த வல்லுநர்கள் அதன் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பத்தாங்கிளாசு! ‘படிக்காத’ டாக்டர்களை பிடிக்க உத்தரவு: போலீசுக்கு பயந்து நிறைய பேர் ஓட்டம்

posted in: மற்றவை | 0

கோவை: மனநலம் பாதித்த சிறுவனை குணப்படுத்துவதாக கூறி, 82 ஆயிரம் ரூபாய் கட்டணம் கறந்த ஆயுர்வேத டாக்டர், போலீ சாரின் நடவடிக்கைக்கு பயந்து பணத்தை திரும்ப ஒப்படைத்தார். இவரது மருத்துவமனையை ரகசியமாக கண்காணிக்க, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால், கோவை மாநகரில் முகாமிட்டிருக்கும் போலி டாக்டர்கள், மாந்திரீகர் கள் சிலர் இடத்தை காலி செய்து தலைமறைவாகினர்.

ரெட்டி ஹெலிகாப்டர் விபத்து – சென்னை ஏடிசியின் அலட்சியமே காரணம்?

posted in: மற்றவை | 0

சென்னை: ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டர் தடம் மாறியதைத் தொடர்ந்து, தங்களுக்கு வழி காட்டுமாறு அந்த ஹெலிகாப்டரின் விமானிகள் தொடர்ந்து சென்னை விமானக் கட்டுப்பாட்டு மையத்தைத் (ஏடிசி) தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் சென்னை ஏடிசியிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லையாம்.

மரக்காணத்தில் அனல் மின் நிலையம்: ஆய்வுப் பணிகள் மீண்டும் துவங்கின

posted in: மற்றவை | 0

திண்டிவனம்: மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் பகுதியில், அனல் மின் நிலையம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகள் மீண்டும் துவக்கப் பட்டுள்ளது.

இன்று ஆசிரியர் தினம் முதல்வர் கருணாநிதி வாழ்த்து

posted in: மற்றவை | 0

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: