கடத்தல் குழந்தைகளை மீட்க உதவிய ஆட்டோ டிரைவருக்கு போலீஸ் பரிசு

posted in: மற்றவை | 0

திருநெல்வேலி:குழந்தைகள் கடத்தலில் துப்புதுலக்க உதவிய திருச்சி ஆட்டோ டிரைவருக்கு நெல்லை எஸ்.பி., பரிசு வழங்கினார்.திருச்சி, கோவை, உடுமலை பகுதிகளில் கடத்தி நெல்லை மாவட்டம் வள்ளியூர் அன்பு சிறுவர் இல்லத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்ட 13 குழந்தைகள் மீட்கப்பட்டன. இதில் துப்புதுலக்க திருச்சி அரசு ஆஸ்பத்திரி ஸ்டாண்ட் ஆட்டோ டிரைவர் ஜோசப் உதவினார்.

மு.கருணாநிதி தலைமையில் கலைஞர் காப்பீட்டு திட்டம் நாளை தொடக்கம்

posted in: மற்றவை | 0

உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டத்தினை மு.கருணாநிதி தலைமையில் குலாம் நபி ஆசாத் நாளை திறந்துவைக்கிறார்.

ஆல்கஹால் சோதனை-மாட்டிய 29 பைலட்டுகள்!

posted in: மற்றவை | 0

டெல்லி: ஆல்கஹால் சோதனையில் 29 விமானிகள் மது அருந்திவிட்டு விமானங்களை இயக்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக சாராய அதிபர் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்தைச் சேர்ந்த பைலட்டுகளே இதில் அதிகமானவர்கள்.

நாளை மிக நீண்ட, அரிய சூரியகிரகணம்-கண் மருத்துவர்கள் எச்சரிக்கை

posted in: மற்றவை | 0

சென்னை: சூரிய கிரகணத்தை கண்ணாடி, பிலிம் கள் உள்பட எதன் மூலமும் பார்க்கக்கூடாது என கண் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்

பாட்னா பல்கலைக்கழகத்தில் மாணவியை காதலித்த பேராசிரியர் வேலை நீக்கம்

posted in: மற்றவை | 0

பீகார் மாநிலம் பாட்னா பல்கலைக்கழகத்திலுள்ள பேராசிரியர் மதுகார்த் சவுத்திரி மாணவியை காதலித்ததால் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அகதிகளுக்கு நிபந்தனையின்றி வேலை வழங்கலாம்: சென்னை போலீஸ் எஸ்பி சாரங்கன்

posted in: மற்றவை | 0

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களை எவ்வித நிபந்தனையும் இன்றி பணிகளுக்கு ஆட்தேர்வு செய்யலாம் என தொழிற்சாலை நிர்வாகத்தினருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்பி சாரங்கன் கூறினார்.

போலீசுக்கு ஆள் தேர்வின் போது நெரிசலில் சிக்கி 2 பேர் பலி

posted in: மற்றவை | 0

உத்தரபிரதேச மாநிலம் சந்தோலி என்ற இடத்தில் போலீஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அத்தேர்வில் கலந்துகொண்ட இருவர் நெரிசலில் சிக்கி இறந்துள்ளனர்.

பெரியாறு அணை அருகே புதிய அணை: துபாய் நிறுவனத்திடம் கேரளா காண்ட்ராக்ட்

posted in: மற்றவை | 0

இடுக்கி: தமிழகத்தின் கடும் எதி்ர்பபையும் மீறி முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ள கேரள அரசு, இந்தப் பணியை துபாயைச் சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.

மகனுக்கு வாரிசு வேலையை பெற கணவரை கொன்ற பெண் கைது

posted in: மற்றவை | 0

பீகார் மாநிலம் முன்னாபூர் என்ற இடத்தை சேர்ந்தவர் சஞ்சய்ரவுத். ரெயில்வே துறையில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி மஞ்சுதேவி. இவர்களுடைய மகன் விகாஸ்ரவுத். சஞ்சய் ரவுத் கடந்த மாதம் 25-ந்தேதி மர்மமான முறையில் சுட்டுக்கொல்லப்பட்டு கிடந்தார்.