தனுஷ்கோடி வழியாக சேதுசமுத்திர திட்டம்: ஆய்வு பணியை துவக்கியது மத்திய அரசு
ராமநாதபுரம்: சேது சமுத்திர திட்டத்தை தனுஷ்கோடி வழியாக நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான ஆய்வுப் பணிகளை துவக்கி உள்ளது. பாக்ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் 2007ல் 2,400 கோடி ரூபாய் மதிப்பில் சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது.