இலங்கை தமிழர்களுக்கு உதவ அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்: தமிழக முதல்வர்
இலங்கையில் முகாமிலுள்ள தமிழர்களுக்கு உதவ அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டுமென்று தமிழக முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் இலங்கைக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச்செல்லும் வணங்காமண் கப்பல் அனுமதிக்கப்படாமல் நிறுத்தப்பட்டது பற்றிய கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீது நடந்த விவாதம் வருமாறு:-