இந்த நூற்றாண்டில் இந்தியர்களின் கடைசி கிரகணம் – ஜூலை 22ம் தேதி

posted in: மற்றவை | 0

கொல்கத்தா: இந்த நூற்றாண்டில் இந்தியாவில் நிகழும் கடைசி சூரிய கிரகணம் அடுத்த மாதம் 22ம் தேதி நடக்கிறது. இதற்கு அடுத்து இந்தியாவில் 2114ம் ஆண்டு ஜூன் 3ல் தான் தெரியும்.

தங்கமான சென்னை மக்கள்!

posted in: மற்றவை | 0

சாலையோரம் கொட்டிக்கிடந்த செம்பு துகள்களை தங்கம் என்றெண்ணி, ஆவலாய் சேகரித்த சென்னை மக்கள் ஏமாற்றமடைந்தனர். இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடிக்குள்ளானது.

சென்னை அணு விஞ்ஞானி மாயம்

posted in: மற்றவை | 0

கர்நாடக மாநிலம் தார்வார் அருகே கெய்காவில் உள்ள அணு மின் நிலையத்தில் பணியாற்றி வந்த சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானி மகாலிங்கம் திடீரென மாயமானதாக இந்திய இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தவறு செய்தால் சிறை : சிறை அதிகாரிகளுக்கு புது, ஏ.டி.ஜி.பி., எச்சரிக்கை

posted in: மற்றவை | 0

தவறு செய்யும் சிறை அதிகாரிகள், அதே சிறையில் கைதியாகும் சூழ்நிலை ஏற்படும். சட்டத்திற்கு பயந்து நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என சிறைத்துறை, புது, கூடுதல் டி.ஜி.பி., ஷியாம் சுந்தர் கூறினார்.

கொல்கத்தாவில் விமானத்துக்கு கீழே நின்ற பெட்ரோல் லாரியில் தீ பிடித்தது: 268 பயணிகள் உயிர் தப்பினர்

posted in: மற்றவை | 0

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சிங்கப்பூரில் இருந்து நேற்று இரவு கொல்கத்தா வந்த விமானத்திற்கு கீழே நின்ற பெட்ரோல் லாரியில் தீப்பிடித்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் கைத்துப்பாக்கி தோட்டாவுடன் அமெரிக்க பயணி

posted in: மற்றவை | 0

சென்னை விமானநிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும்பொழுது கைத்துப்பாக்கி தோட்டவுடன் வந்த அமெரிக்க பயணியை காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

காற்றுப்புக முடியாத அறைக்குள் வைத்து கூட்டமைப்பினரை பூட்ட வேண்டும் – அமைச்சர் மேர்வின் சில்வா

posted in: மற்றவை | 0

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக வெளிநாடுகளில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அவர்களை காற்று புக முடியாத அறைக்குள் வைத்து பூட்ட வேண்டும் என்று அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

ஏன் பெண் என்று படைத்தாய் இறைவா?: தாலிபான்களின் கொடுமை – விடியோ

posted in: மற்றவை | 0

பாகிஸ்தானில் தாலிபான்கள் செய்துவரும் கொடுமைகளுக்கு இந்த விடியோவும் சாட்சி. இஸ்லாமிய மதக்கோட்பாடுகளைக் கடைபிடிக்கிறோம் என்கிற பெயரில் பெண்களுக்கு எதிராக அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளில் கொஞ்சமும் மனிதாபிமானம் இருப்பதில்லை.

ராமநாதபுரம் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் துவங்கியது

posted in: மற்றவை | 0

தமிழ்நாட்டிலேயே வறண்ட மாவட்டமான ராமநாதபுரத்திற்கு குடிநீர் வழங்கும் 616 கோடி ரூபாய் மதிப்பிலான காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் நேற்று முதல் செயல்படத் துவங்கியது.

புத்தர் மறுஅவதாரம் எடுத்திருக்கிறாரா?

posted in: மற்றவை | 0

புத்தர் மறுஅவதாரம் எடுத்துவிட்டார் என்கிறார்கள். நேபாள நாட்டுக் காட்டுக்குள், அடர்த்தியான பகுதி ஒன்றில் கடந்த ஓராண்டாக தவம் புரிந்துவரும் 17 வயதான ராம் பகதூர் பம்ஜான் என்ற வாலிபரைத்தான் நேபாள பிக்குகள் புத்தராக கருதுகிறார்கள். கீர்த்தி சிறிதானாலும் மூர்த்தி பெரிதாகத் தெரியும் இந்த வாலிப சாமியாரைக் காண ஆயிரக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். ஆசிர்வாதம் பெற்று திரும்புகிறார்கள்.