கனடா எம்.பி.,யை அனுமதிக்காது திருப்பி அனுப்பியது இலங்கை

posted in: மற்றவை | 0

கொழும்பு:விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என கனடா நாட்டைச் சேர்ந்த எம்.பி., ஒருவரை, இலங்கை அரசு நேற்று திருப்பி அனுப்பியது.இலங்கையில், ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே 25 ஆண்டுகளாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்ததாக கடந்த மாதம் 18ம் தேதி அந்நாட்டு அதிபர் அறிவித்தார்.

விபத்துக்குள்ளான விமானம் கண்டெடுப்பு: வீரர்களின் சடலங்கள் மீட்பு

posted in: மற்றவை | 0

அருணாசலப் பிரதேசம் அருகே செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளான இந்திய விமானப் படையின் சரக்கு விமானத்தையும், அதில் பயணம் செய்த ராணுவ வீரர்கள் 13 பேரின் சடலங்களும் புதன்கிழமை மீட்கப்பட்டன.

துப்பாக்கியால் கசாப் சுட்டதை பார்த்தேன்: சிறுமி சாட்சியம்

posted in: மற்றவை | 0

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் பொதுமக்களை நோக்கி சரமாரியாகச் சுட்ட இரு நபர்களில் அஜ்மல் கசாபும் ஒருவர் என்று தீவிரவாதிகள் சுட்டதில் கால் ஊனமடைந்த தேவிகா ரொடாவன் (10) என்ற சிறுமி, நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.

ஐ.டி. நிறுவனங்களுக்கு மேலும் 3 ஆண்டுக்கு வரிச் சலுகை: பிரதமரிடம் ஆ. ராசா கோரிக்கை

posted in: மற்றவை | 0

மென்பொருள் தொழில்நுட்ப பூங்கா திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு வரிச் சலுகை அளிக்கப்பட வேண்டும் என்று தொலைத் தொடர்பு மற்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிருடன் இருப்பேன்… பெட்?!: 10 ஆயிரம் பவுண்ட் வென்ற புற்றுநோயாளி

posted in: மற்றவை | 0

மனிதன் என்றால் தன்னம்பிக்கை வேண்டும். நோயாளி என்றால் மருந்துக்கு பதில் தன்னம்பிக்கையை மாத்திரையாகக் கொடுத்தால் போதும் எழுந்து உட்கார்ந்துவிடுவான். இதற்கு உதாரணமாக திகழும் ஜான் மாத்யூஸ் அந்த தன்னம்பிக்கையையே காசாக்கி விட்டார் என்றால் அவருடைய திறமையை என்னவென்பது.?

தேசிய கொடி எரிப்பு-நூதன தண்டனையுடன் ஜாமீன்!

posted in: மற்றவை | 0

சென்னை: தேசியக் கொடியை எரிக்க முயன்ற தமிழ் தேசிய விடுதலை இயக்கம், தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வித்தியாசமான நிபந்தனையுடன் ஜாமீன் அளித்தது.

திருமண உதவித்தொகை திட்டம்: சான்று தேவையில்லை

posted in: மற்றவை | 0

திண்டுக்கல்: திருமண நிதி உதவி பெறும் திட்டத்தில் உதவித்தொகை பெற ஊராட்சித் தலைவர் சான்று தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ஏழைகளுக்கு வழங்கும் திருமண உதவித்தொகை பெற ஆண்டு வருமானம் 24 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

100 நாட்களில் 6 லட்சம் பேருக்கு வேலை! – ஒபாமாவின் சபதம்

posted in: மற்றவை | 0

வாஷிங்டன்: அடுத்த 100 நாட்களில் அமெர்க்கர்களுக்கு 6 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகள் துவங்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த நாட்டில் சினிமா பார்த்த சவுதி அரேபிய மக்கள்

posted in: மற்றவை | 0

பொதுநலத்திற்காக வேலைநிறுத்தம் செய்கையில் திரையரங்குகளை மூடினால் கூட, ‘அட, என்னடா நாடு இது… ஜனநாயகமே செத்துபோச்சே’ என்று புலம்புகிறோம். சந்துக்கு சந்து திரையரங்குகள், வீட்டுக்கு வீடு டிவிடி என பொழுதுபோக்குக்கு நமக்கு பஞ்சம் என்பது வந்ததேயில்லை.

மின்சாரம் பாயும் நேரம்!: ஒரு அதிர்ச்சி விடியோ

posted in: மற்றவை | 0

கடந்த மே 15 ஆம் தேதி நடந்த கோர சம்பவம் இது. உயிர் ஒன்று பிரியும் கணத்தை நூற்றுக்கணக்காணோர் நேரிடையாகப் பார்த்த தருணம் அது.