அழகிரி விவகாரம்-சோனியாவுடன் டி.ஆர்.பாலு அவசர சந்திப்பு

posted in: அரசியல் | 0

டெல்லி: மு.க.அழகிரி தனது அமைச்சர் பதவியிலிருந்த விலகுவதாக முதல்வர் கருணாநிதியிடம் கடிதம் கொடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை திமுக எம்பிக்கள் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு இன்று டெல்லியில் அவசரமாக சந்தித்துப் பேசினார்.

மிசா காலத்தில் என் உயிரை காப்பாற்றிய சென்னை பொது மருத்துவமனை : ஸ்டாலின் உருக்கம்

posted in: அரசியல் | 0

சென்னை: மிசா காலத்தில் என் உயிரை சென்னை பொதுமருத்துவமனை தான் காப்பாற்றியது என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமாகத் தெரிவித்தார்.

சீர்காழியிலிருந்து கர்நாடகத்திற்கு மின்சாரம்: ஒப்பந்தம் கையெழுத்து

posted in: மற்றவை | 0

கடலூர் : சீர்காழியில் அமைய உள்ள அனல் மின் நிலையத்திலிருந்து, கர்நாடக மாநிலத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கான ஒப்பந்தம் பெங்களூரில் முதல்வர் எடியூரப்பா முன்னிலையில் கையெழுத்தானது.

திருச்சி அரசு விழாவில் இரு அமைச்சர்கள் மோதல்: முதன்மை செயலர் சமாதானம்

posted in: அரசியல் | 0

திருச்சி : திருச்சியில் நேற்று நடந்த அரசு விழாவில், ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சரும், வனத்துறை அமைச்சரும் நேருக்கு நேர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பறக்க’ ஆரம்பித்திருக்கும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஓவன் விலைகள்!

posted in: மற்றவை | 0

மும்பை: வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மிக்சி, கிரைண்டர் போன்ற நுகர்வோர் பொருள்களின் விலைகள் 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.

ராசாவை நீக்கவும், தன்னை அவதூறாகப் பேசிய கனிமொழி, பூங்கோதையை நீக்கவும் அழகிரி கோரிக்கை

posted in: அரசியல் | 0

சென்னை: மு.க.அழகிரி விவகாரம் பெரிதாகியுள்ளது. நீரா ராடியாவுடன் பேசும்போது தன்னைப் பற்றி அவதூறான முறையில் கருத்துக்களை வெளியிட்ட கனிமொழி, பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோட்டார் வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு: மன்னார்குடியில், நிலக்கரி படுகை மீதேன் வாயு உற்பத்தி செய்யும் திட்டம்; மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது

posted in: அரசியல் | 0

மோட்டார் வாகனங்களுக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு சப்ளை செய்வதற்காக, மன்னார்குடியில் நிலக்கரி படுகை மீதேன் வாயு தயாரிக்கும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னையில் நேற்று கையெழுத்தானது.

சச்சின் 51வது சதம் * டெஸ்ட் அரங்கில் மீண்டும் அசத்தல்

கேப் டவுன்: கேப் டவுன் டெஸ்டில் அபாரமாக ஆடிய சச்சின் சதம் கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 51 வது சதம் அடித்து, மீண்டும் அசத்தினார்.