கூட்டணி குறித்து 9ம் தேதி விஜயகாந்த் அறிவிப்பு

posted in: அரசியல் | 0

சேலம் : “”சேலத்தில் ஜனவரி 9ம் தேதி நடக்கும் மாநில மாநாட்டில், கூட்டணி குறித்து தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த் அறிவிப்பார்,” என, தே.மு.தி.க., மாநில இளைஞர் அணி செயலர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு 1.1 ட்ரில்லியன் டாலர்களைக் குவித்த வளைகுடா எண்ணெய் உற்பத்தி நாடுகள்!

posted in: உலகம் | 0

துபாய்: வளைகுடாவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள்தான் இந்த ஆண்டு எக்கச்சக்க வருமானம் பார்த்துள்ளன. 2010-ம் ஆண்டு இந்த நாடுகளின் மொத்த வருமானம் 1.1 ட்ரில்லியன் டாலர்கள் ஆக உயர்ந்துள்ளது.

டிரக், பஸ் ரேடியல் டயர் தயாரிக்க பிரிட்ஜ்ஸ்டோன் முடிவு

புதுடில்லி : ஜப்பானிய டயர் தயாரிப்பு நிறுவனமான பிரிட்ஜ்ஸ்டோன் டிரக், பஸ்களுக்கான ரேடியல் டயர் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக இந்தூரில் இருக்கும் தொழிற்சாலையில் ரூ. 170 கோடி முதலீடு செய்கிறது.

வாழ்க்கை வரலாற்று புத்தகத்திற்காக ரூ.7 கோடிக்கு அசாஞ்ச் ஒப்பந்தம்

posted in: உலகம் | 0

லண்டன் : தான் எழுதிய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை பதிப்பித்து வெளியிட, பதிப்பகங்களுடன் ஏழு கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளார், “விக்கிலீக்ஸ்’ நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச்.

நாட்டின் சொத்தை அடிமாட்டு விலைக்கு தாரைவார்த்துள்ளார் ராசா-ஜெ

posted in: அரசியல் | 0

சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், பாரதப் பிரதமரின் அறிவுரையை மீறி, நிதி அமைச்சகத்தின் அறிவுரையை மீறி, சட்ட அமைச்சகத்தின் அறிவுரையை மீறி, தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் அறிவுரையை முற்றிலும் புறக்கணித்து, எந்த கொள்கையையும் கடைபிடிக்காமல், அனைத்து விதிமுறைகளையும் காற்றில் பறக்கவிட்டு, தன்னிச்சையாக நாட்டின் சொத்தை அடி மாட்டு விலைக்கு தாரை வார்த்து இருக்கிறார் ராசா … Continued

2010 டாப் 10 சம்பவங்கள்

posted in: உலகம் | 0

1. விக்கிலீக்ஸ் – அமெரிக்காவைப் பற்றி இத்தனை காலமாக உலக நாடுகள் நினைத்துக் கொண்டிருந்த தோற்றத்தை ஒரு சில நாட்களில் அப்படியே மாற்றிப் போட்டது விக்கிலீக்ஸின் ரகசிய ஆவண வெளியீடுகள்.

ஸ்பெக்ட்ரம் விசாரணைக்காக நேரில் ஆஜராகத் தயார்-மன்மோகன் கடிதம்

posted in: அரசியல் | 0

டெல்லி: ஸ்பெக்ட்ரம் விசாரணைக்காக நேரில் ஆஜராகத் தயார் என்று பொதுக் கணக்குக் கமிட்டித் தலைவர் முரளி மனோகர் ஜோஷிக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

டிச., 30,31ம் தேதிகளில் அனைத்துக்கட்சி கூட்டம்

posted in: மற்றவை | 0

சென்னை : பார்லிமெண்ட் பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்தும் பொருட்டு, டிசம்பர் 30 மற்றும் 31ம் தேதிகளில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற இருப்பதாக பார்லிமெண்ட் விவகாரத்துறை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

ரெட்டி சகோதரர்கள் ரூ.86 கோடி வரி ஏய்ப்பு

posted in: அரசியல் | 0

கர்நாடகா மாநிலத்தில் எடியூரப்பா தலைமையில் நடைபெறும் பா.ஜ.க. அரசில்ரெட்டி சகோதரர்கள் என்றழைக்கப்படும் ஜனார்த்தன ரெட்டி, வெங்கட்ரெட்டி இருவரும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ரெட்டி சகோதரர்கள் பெல்லாரி மாவட்டத்தில் எராளமான சுரங்கத்தொழில்களை நடத்தி வருகிறார்கள். இவர்கள் சட்டவிரோதமாக சுரங்கத் தொழில் நடத்தி வருவதாக புகார்கள் எழுந்தன. ரெட்டி சகோதரர்களின் சுரங்கங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே … Continued

ரூ.12 கோடி வரி விதிப்பு பா.ஜ.க. தலைவர் சின்காவிடம் ராடியா பேச்சு எடுபடவில்லை; சாதகமாக செயல்பட மறுத்து திருப்பி அனுப்பினார்

posted in: அரசியல் | 0

காங்கிரஸ் தலைமையில் கடந்த ஆண்டு மந்திரிசபை அமைந்தபோது, இலாகா ஒதுக்கீட்டில் அரசியல் தரகர் நீரா ராடியா தலையிட்டு முக்கிய முடிவுகள் எடுத்தார்.