வெள்ளைக் கொடிகளுடன் சரணடைந்த புலிகள் கொலை: கோதபயசவுக்கு எதிராக பொன்சேகா சாட்சியம்
கொழும்பு: வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை கொன்று விடுமாறு அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியும் பாதுகாப்புத்துறைச் செயலாளருமான கோதபய ராஜபக்சே உத்தரவிட்டிருந்தார் என்று அந் நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.