ரூ.1 கோடியில் பறக்கும் கார் அமெரிக்காவில் 2011ல் அறிமுகம்

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : சாலையில் ஓடுவதுடன், வானில் பறக்கும் வசதி கொண்ட பறக்கும் கார், அமெரிக்காவில் 2011ம் ஆண்டில் அறிமுகமாகிறது. அதன் விலை ரூ.1 கோடி. சாலையில் ஓடக்கூடிய, அதேநேரத்தில் வானிலும் பறக்கும் வசதி கொண்ட காரை அமெரிக்க நிறுவனமான டெர்ராப்யூஜியா தயாரித்து வருகிறது.

அமெரிக்காவில் கைதான தீவிரவாதி ஹெட்லி பற்றி திடுக்கிடும் தகவல்

posted in: மற்றவை | 0

புதுடெல்லி, : அமெரிக்காவில் கைதான லஸ்கர்&இ&தொய்பா தீவிரவாதி ஹெட்லி பற்றி திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. மும்பை தாக்குதலுக்கு முன் அவன் டெல்லி ஓட்டல்களில் தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.

1 மணி நேர லெக்சருக்கு ரூ.82,000 10 வயது பொடியன் 2 கம்பெனிக்கு சி.இ.ஓ.

posted in: உலகம் | 0

கோலாலம்பூர், : மலேசியாவை சேர்ந்த 10 வயது பொடியன், 2 கம்பெனிகளுக்கு தலைமை செயல் அதிகாரியாக கலக்குகிறான். படிப்பை பாதியில் விட்ட அவனுக்கு, கல்லூரிகளில் 1 மணி நேரம் விரிவுரையாற்ற ரூ.82,000 தரப்படுகிறது.மலேசிய தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்தவர் செரியனா அலியாஸ்.

நவம்பர் 27 ல் மாவீரர் நாள் உரை நிகழ்த்த வருகிறார் பொட்டு

posted in: உலகம் | 0

மாவீரர் நாளுக்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில், அந்த நாளின் உரையை வாசிக்கப் போவது யார் என்ற பரபரப்பான கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்த ஆண்டு பொட்டு அம்மான்தான் இந்த வரலாற்றுப் புகழ்மிக்க உரையை வாசிக்கப் போகிறார் என்று ஆனந்த விகடன் வார இதழ் வெளியிட்டுள்ள கட்டுரை தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விசைத்தறி உரிமையாளர்கள் 17ம் தேதி ஸ்டிரைக்

சங்கரன்கோவில்: விசைத்தறிக்கான நூல் விலை உயர்வை கண்டித்து சங்கரன்கோவில் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர் சார்பில் வரும் 17ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் உண்ணா விரத போராட்டம் நடத்தப்பட உள்ளது.

3 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பிற்கு மேலூரில் டிராக்டர் தொழிற்சாலை : மு.க. அழகிரி ஆய்வு

posted in: அரசியல் | 0

மதுரை : மேலூர் அம்பலக்காரன்பட்டியில் டிராக்டர் தொழிற்சாலை அமைய உள்ள இடத்தை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆய்வு செய்தார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அம்பலக்காரன்பட்டியில் 266 ஏக்கர் பரப்பில் டிராக்டர் தொழிற்சாலை அமைய உள்ளது. இதற்கான இடத்தை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, இந்தோனேசிய தொழில் அதிபர்களுடன் சென்று ஆய்வு செய்தார்.

இந்திய ராணுவத்தை அழைக்க திட்டம் : சரத் பொன்சேகா திடீர் புகார்

posted in: உலகம் | 0

கொழும்பு : “ராணுவப் புரட்சி வெடிக்கும் என்ற பயத்தில், அதை அடக்குவதற்காக இலங்கைக்கு இந்திய ராணுவத்தை வரவழைப்பதற்கு, இலங்கை அரசு ஏற்பாடு செய்தது’என்ற பரபரப்புத் தகவலை, இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

காந்தியம் வறட்டுச் சித்தாந்தமில்லை…

posted in: மற்றவை | 0

எனக்கு மட்டும் அதிகாரம் இருக்குமானால் வகுப்புவாதத்தையும், மதவெறியையும், வெறுப்புணர்வையும், பகையையும் வளர்க்கக்கூடிய எல்லா எழுத்துகளையும் தீண்டத்தகாதவையாக அறிவிப்பேன்.

மகாத்மா காந்தி பெயரில் புதிய இயக்கம்

posted in: மற்றவை | 0

சென்னை, அக்.1 அரசியலை சரியான பாதையில் கொண்டு செல்வதற்காக, ‘காந்திய அரசியல் இயக்கம்’ எனும் பெயரில் புதிய இயக்கத்தை தொடங்க இருப்பதாக சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகளுக்கு ஊழல் பயம் போய்விட்டது: முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி முருகன்

posted in: மற்றவை | 0

சென்னை, அக். 2: ஊழல் செய்தால் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்கிற பயம் அரசியல்வாதிகளிடம் இப்போது இல்லை என்று ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி என்.முருகன் தெரிவித்தார்.