இடைநிலை ஆசிரியர்கள் 1,943 பேர் நியமனம் : தமிழக அரசு உத்தரவு

posted in: கல்வி | 0

தற்போது தேர்வு செய்யப்பட உள்ள 1,943 பேரும், ஏற்கனவே சான்றிதழ் சரிபார்க்கப் பட்ட பட்டியலில் இருந்தே தேர்வு செய்யப்பட உள்ளனர். புதிதாக, வேலை வாய்ப்பு அலுவலகத்திடம் இருந்து பதிவு மூப்பு பட்டியல் கேட்டு, தேர்வு செய்யப்படவில்லை.

இந்தியாவின் பகுதி அருணாச்சல் மாநிலம் : சீனாவுக்கு இதில் உரிமையில்லை: பிரணாப்

posted in: அரசியல் | 0

இடாநகர் : “அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவுடன் ஒன்றிணைந்த பகுதி, இதில் சீனாவுக்கு உரிமை கோர எந்த உரிமையும் இல்லை’ என, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறினார். அருணாச்சலப் பிரதேசம் இடாநகரில், நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: சீனாவிடம், இந்திய இறையாண்மையை அடகு வைக்கும் பேச்சுக்கே இடமில்லை. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவுடன் ஒன்றிணைந்த பகுதிதான்.

மன்மோகன் சிங்குக்கு ஒபாமா விருந்து

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : அமெரிக்க வெள்ளை மாளிகையில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு, அதிபர் ஒபாமா, சிறப்பு விருந்து அளிக்க உள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மதிப்புக்கு உரியவர் பிரதமர் மன்மோகன் சிங்.பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங் குக்கு, முன்பு அதிபராக இருந்த புஷ்ஷும், தனது மாளிகைக்கு அழைத்து சிறப்பு விருந்து அளித்து பெருமைப்படுத்தியுள்ளார்.

தேக்கடிக்கு சுற்றுலா சென்ற பயணிகளின் படகு கவிழ்ந்து 50 பேர் பலி

posted in: மற்றவை | 0

கேரள மாநிலம், தேக்கடி ஏரியில் படகு கவிழ்ந்து 83 சுற்றுலா பயணிகள் தண்ணீரில் மூழ்கினர். அவர்களில் சுமார் 50 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

இந்தியாவுக்கு சுனாமி எச்சரிக்கை

posted in: மற்றவை | 0

இந்தோனேசியாவை ஒட்டிய பசிபிக் கடலின் அடிப்பகுதியில் புதன்கிழமை மாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையொட்டி இந்தியாவிற்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நிறுவன காண்டிராக்டை பெற்றது டிசிஎஸ்

மும்பை: இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்ஸி சர்வீஸஸ் (டிசிஎஸ்) பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிங்கப்பூர் அரசு காண்டிராக்டைப் பெற்றுள்ளது.

பஸ்களில் இனி சாட்டிலைட் மூலம் படம்!

posted in: மற்றவை | 0

சென்னை: இனிமேல் டிரைவர், கண்டக்டருக்குப் பிடித்த படத்தை (நமக்குப் பிடித்துத் தொலைக்காத) பார்த்தாக வேண்டிய கட்டாயமில்லை. அதற்குப் பதில் சாட்டிலைட் மூலமாக பஸ்களில் திரைப்படங்களை ஒளிபரப்பப் போகிறார்கள்.

சத்யம் மோசடிக்கு உடந்தையாக இருந்த ஆடிட்டர்கள்!

மும்பை: சத்யம் நிறுவனத்தின் நிறுவனர் ராமலிங்க ராஜு செய்த ரூ.7800 கோடி மோசடியில் அந்நிறுவனத்தின் முன்னாள் அதிகாரிகள் இருவருக்கும் தணிக்கை நிறுவனமான பிரைஸ்வாட்டர் ஹவுஸுக்கும் பெரும் பங்கிருப்பதாக இந்திய தணிக்கை நிறுவனம் (ICAI) அறிவித்துள்ளது.

அணு யுத்தம் வந்தால் பாக். அழியும்; 50 கோடி இந்தியர்களும் பலியாவார்கள் – யு.எஸ். நூல்

posted in: உலகம் | 0

நியூயார்க்: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அணு யுத்தம் மூண்டால் பாகிஸ்தான் ஒட்டுமொத்தமாக அழிந்து போகும். அதேசமயம், 50 கோடி இந்தியர்கள் வரை மாளுவார்கள் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் பதவிக்காலத்தில் நடந்த நிகழ்வுகள் குறித்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் கண்டுபிடிக்கப்பட்டதன் எதிரொலி-நிலவில் இடம் வாங்க போட்டா போட்டி

posted in: மற்றவை | 0

பெங்களூர்: இருக்கிற இடத்தையெல்லாம் வீடுகளாக கட்டிக் குவித்துக் கொண்டிருக்கும் நம்மவர்களுக்கு நிலவில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டவுடன், அங்கேயும் கொஞ்சத்தை வாங்கிப் போட்டு விட வேண்டும் என்ற ஆர்வம் பிறந்து விட்டது.