பத்தாங்கிளாசு! ‘படிக்காத’ டாக்டர்களை பிடிக்க உத்தரவு: போலீசுக்கு பயந்து நிறைய பேர் ஓட்டம்
கோவை: மனநலம் பாதித்த சிறுவனை குணப்படுத்துவதாக கூறி, 82 ஆயிரம் ரூபாய் கட்டணம் கறந்த ஆயுர்வேத டாக்டர், போலீ சாரின் நடவடிக்கைக்கு பயந்து பணத்தை திரும்ப ஒப்படைத்தார். இவரது மருத்துவமனையை ரகசியமாக கண்காணிக்க, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால், கோவை மாநகரில் முகாமிட்டிருக்கும் போலி டாக்டர்கள், மாந்திரீகர் கள் சிலர் இடத்தை காலி செய்து தலைமறைவாகினர்.