வருகை நாட்கள் குறைவான 21 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி மறுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாவில் உள்ள தனியார் பொ‌றி‌யிய‌ல் கல்லூரி‌யி‌ல் படி‌த்து வரு‌ம் மாணவ‌ர்க‌‌ளி‌‌ல் 21 பே‌ரி‌ன் வருகை நா‌ட்க‌ள் குறைவானதா‌ல் அவ‌ர்‌களை தே‌ர்வு எழுத செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் அனும‌தி அ‌ளி‌க்க மறு‌த்து‌வி‌ட்டது.

ஐசிசி விருதுகள்- டோணி உள்பட 6 இந்தியர்களின் பெயர்கள் பரி்ந்துரை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் பல்வேறு விருதுகளுக்கு இந்தியாவைச் சேர்ந்த 6 வீரர்களின் பெயர்கள் பரி்ந்துரைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி ஆனார் லத்திகா சரண்

posted in: மற்றவை | 0

கூடுதல் டிஜிபியாக செயல்பட்டு வந்த லத்திகா சரண் பயிற்சி டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதன்மூலம் தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமையை அவர் பெறுகிறார்.

அக்டோபர் 2… காந்தியின் பிறந்தநாள் மட்டும் அல்ல. ’காந்திய அரசியல் இயக்கம்’ பிறக்கப் போகும் நாளும்கூட

posted in: மற்றவை | 0

அக்டோபர் 2… காந்தியின் பிறந்தநாள் மட்டும் அல்ல. ’காந்திய அரசியல் இயக்கம்’ பிறக்கப் போகும் நாளும்கூட. தமிழக காங்கிரஸின் பொதுச் செயலாளர், தமிழ்நாடு மாநில திட்டக் குழு உறுப்பினர் போன்ற பதவிகளை எல்லாம்…. ஈழத் தமிழர் நலனுக்குக் குரல் கொடுப்பதற்காகவே துறந்த தமிழருவி மணியன், அக்டோபர் 2 முதல் ’காந்திய அரசியல் இயக்கத்தை’த் தொடங்குகிறார். ”பிளாஸ்டிக் … Continued

சிங்கூர் நிலத்தைத் தரத் தயார், ஆனால்… டாடா நிபந்தனை

கொல்கத்தா: உரிய நஷ்ட ஈடு கொடுத்தால் சிங்கூர் நிலத்தை திருப்பித் தந்துவிடுவதாக டாடா நிறுவனத் தலைவர் ரத்தன் டாடா அறிவித்துள்ளார். மேலும் இப்போதைக்கு மேற்கு வங்கத்தில் எந்த முதலீடும் செய்யும் திட்டமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

பெண்களுக்காக பெண்களே நடத்தும் கோர்ட்:ஆணாதிக்க உ.பி.,யில் புரட்சி

posted in: கோர்ட் | 0

லக்னோ:பெண்களுக்காக பெண்களே ஆரம்பித்து நடத்தும், “கோர்ட்’ உ.பி.,யில் செயல்படுகிறது. பெண்களின் பிரச்னைகள் குறித்து, வாத பிரதிவாதங்களைக் கேட்டு தீர்ப்பு அளிக்கப்படுகிறது.உ.பி., மாநிலத்தில் சித்தாபூர் மாவட்டத்தில் இந்த பெண்கள் “கோர்ட்’ அமைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, கிராமப் பெண்களுக்கு உள்ள சிறிய பிரச்னைகள் குறித்து தான் இந்த கோர்ட்டில் வாதிடப்படுகிறது. இந்தப் பிரச்னைகளைத் தீர்ப்பதில் இந்தப் பெண்கள் அளிக்கும் தீர்ப்பும் ஏற்றுக் … Continued

காப்பீட்டு திட்டத்தின் நோய்கள் பட்டியல் ஊராட்சிகளில் வைக்க அமைச்சர் உத்தரவு

posted in: அரசியல் | 0

விழுப்புரம் : “காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்படும் 51 வகையான நோய்கள் பட்டியலை, ஒவ்வொரு ஊராட்சியிலும், பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்’ என, அமைச்சர் பொன்முடி கூறினார். விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த அரசு விழாவில், அமைச்சர் பொன்முடி பேசியதாவது:

ஐ.ஐ.டி., விரிவுரையாளர் ஆக பிஎச்.டி., தேவையில்லை

posted in: கல்வி | 0

புதுடில்லி: ஐ.ஐ.டி.,க்களில் விரிவுரையாளராகப் (லெக்சரர்) பணியாற்ற பிஎச்.டி., படிப்புத் தகுதி, இனி தேவையில்லை என்ற முடிவுக்கு, கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ‘கிரேடு’ முறை அமல்: கபில் சிபல்

posted in: கல்வி | 0

‘நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும் ‘கிரேடு’ முறை அறிமுகப்படுத்தப்படுகிறது என’, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

ராபர்ட் போஸ்ச் இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனம் கோவையில் தடம் பதிக்கிறது

கோவை : சர்வதேச அளவில் தனக்கென இன்ஜினியரிங் சர்வீசில் தனி முத்திரை பதித்துள்ள ராபர்ட் போஸ்ச் இன்ஜினியரிங் நிறுவனம் இந்தியாவில் 170 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது.