தேக்கடிக்கு சுற்றுலா சென்ற பயணிகளின் படகு கவிழ்ந்து 50 பேர் பலி
கேரள மாநிலம், தேக்கடி ஏரியில் படகு கவிழ்ந்து 83 சுற்றுலா பயணிகள் தண்ணீரில் மூழ்கினர். அவர்களில் சுமார் 50 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
கேரள மாநிலம், தேக்கடி ஏரியில் படகு கவிழ்ந்து 83 சுற்றுலா பயணிகள் தண்ணீரில் மூழ்கினர். அவர்களில் சுமார் 50 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 32 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
சென்னை : சென்னை கோயம்பேட்டில் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கோயம்பேடு காய்கறி- பழங்கள் மார்க்கெட்டை சுத்தமாக பராமரிக்கவும், திடக் கழிவு மேலாண்மை செய்யவும், மற்றும் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கவும், ஒப்பந்தப்புள்ள கோரப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத் : கடந்த 1990ம் ஆண்டு, பாகிஸ்தானின் அணுஆயுத கூடங்கள் தாக்கப்பட்டால், இந்தியாவின் அணுஆயுத வசதிகளை தாக்க, தயாராக இருக்குமாறு, பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் பெனசிர் பூட்டோ, விமானப் படைக்கு உத்தரவிட்டிருந்தார். இத்தகவலை, அந்நாட்டு ராணுவ முன்னாள் தலைமை ஜெனரல் மிர்சா அஸ்லம் பெக் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய 165 ஏவுகணைகளில் ஒப்பந்த விதிகளை மீறி பாகிஸ்தான் மாற்றம் செய்துள்ளது. இந்தியாவை குறி வைத்து இவை அமைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் இந்த செயலுக்கு அமெரிக்க அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் குமரன் பத்மநாதனிடம் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் சமச்சீர்கல்வித் திட்டம், அடுத்த கல்வியாண்டில் அமல்படுத்தப்படும் என, முதல்வர் கருணாநிதி அதிரடியாக அறிவித்துள்ளார்.
புதுடில்லி : ஜெர்மனியின் சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பி.எம்.டபிள்யு., இரண்டு புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்துகிறது.இந்த கார்களை அறிமுகப்படுத்துவதோ இந்த ஆண்டில் விற்பனையை 3000 யூனிட்டுகளாக அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளது.
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது பெண்களுக்கு உள்ள 33 சதவீத இடஒதுக்கீட்டை, 50 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சவை ஒப்புதல் அளித்துள்ளது. பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் புதுமையை ஏற்படுத்தும் இந்த அதிரடி முடிவை அரசு எடுத்தது.
‘‘போலீஸ் கமிஷனர் உத்தரவுபடிதான் ஐகோர்ட் வளாகத்தில் வக்கீல்கள் மீது தடியடி நடத்தினோம்’’ என்று உயர் நீதிமன்றத்தில் கூடுதல் போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.
மதுரை: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மூன்று மணி நேரத்தில் 14 பேருக்கு மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆனால் இந்த சாதனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.