சீனா-அமெரிக்கா ஆடும் பொருளாதார சதுரங்கம்

posted in: உலகம் | 0

கடந்த சில ஆண்டுகளாக உலகளவில் உள்ள அனைத்து பொருளாதாதார வல்லுனர்களாலும் கேட்கப்படும் கேள்வி- சீனா மேலை நாடுகளை மீறி பொருளாதார வல்லரசாக மாறுமா என்பதாக தான் இருக்கும். இன்றைய உலக பொருளாதாரத்தில் நடப்பது தான் என்ன?. சீனாவின் இன்றைய உண்மையான நிலை தான் என்ன?. அது பற்றி இப்போது பார்ப்போம்.

எப்.ஐ.ஆர்., பதிவானால் துணைவேந்தராக நீடிக்கலாமா?தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

posted in: கோர்ட் | 0

சென்னை : “முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டால், துணைவேந்தராக பதவியில் நீடிக்கலாமா?’ என சென்னை ஐகோர்ட் கேள்வி கேட்டுள்ளது. கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிரான வழக்கில், ஐகோர்ட் இந்த கேள்வியை எழுப்பியுள்ளது. வரும் 31ம் தேதி அரசு பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பண்ணைசாரா கடன்களுக்கு வட்டி தள்ளுபடி

posted in: அரசியல் | 0

விருதுநகர்: கூட்டுறவு சங்கங்களின் மூலம் பண்ணைசாரா கடன் பெற்றவர்களுக்கு, சிறப்பு கடன் தீர்வுத்திட்டத்தில் வட்டி தள்ளுபடி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பண்ணை சாரா கடன் தீர்வுத்திட்டத்தின் மூலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், ஊரக வளர்ச்சி வங்கிகள் மூலம் கடன் பெற்றவர்கள் பயன் பெறலாம். … Continued

ஜி.பி.எஸ்., மூலம் விலை உயர்ந்த வயலின் மீட்பு: இந்திய டாக்சி டிரைவருக்கு வெகுமதி

posted in: உலகம் | 0

நியூயார்க்: அமெரிக்காவில், டாக்சியில் தொலைந்து போன விலை உயர்ந்த பழமையான வயலின், செயற்கைக்கோள் தொடர்புள்ள ஜி.பி.எஸ்., சிஸ்டம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. நேர்மையான டாக்சி டிரைவரான இந்தியருக்கு, வெகுமதி தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம்: நாகர்கோவில் தம்பதியின் புதிய கண்டுபிடிப்பு

posted in: மற்றவை | 0

தொலைக்காட்சிப்பெட்டி, மின்விசிறி ஆகியவற்றை செல்போனின் மூலம் இயக்கும் முறையை கண்டறிந்த நாகர்கோவில் தம்பதிகளை நோக்கியா நிறுவனம் ஜெர்மனிக்கு அழைத்துள்ளது. நாகர்கோவில் அருகே தளவாய்புரத்தை சேர்ந்தவர் பினு ஜான்சன். இவர் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக உள்ளார்.

அடுத்த கல்வியாண்டு முதல் தமிழகத்தில் சமச்சீர் கல்வி

posted in: கல்வி | 0

சென்னை: தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு சமச்சீர் கல்வித் திட்டம் அமலாகிறது. முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ராமலிங்க ராஜுவின் ரூ.1000 கோடி சொத்துக்கள் ஜப்தி!

டெல்லி: ரூ.7800 கோடி ரூபாய் மோசடி செய்து சிறையில் உள்ள சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜு மற்றும் அவரது தம்பி ராம ராஜு ஆகியோரது குடும்பத்தினருக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி சொத்துக்களை அமலாக்கப் பிரவினர் ஜப்தி செய்துவிட்டனர்.

57 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி குறைவு : திருவாரூரில் வேளாண் அமைச்சர் ‘திடுக்’

posted in: அரசியல் | 0

திருவாரூர் : பருவ மழை பொய்த்தது, மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாதது போன்ற காரணங்களால் திருவாரூர் மாவட்டத்தில் 57 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி குறைந்துள்ளது என்று, வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.

புதிதாக 12 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

posted in: கல்வி | 0

சென்னை : “”புதிதாக 12 ஆயிரம் ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைத்து விடும். அதன்பின், ஆசிரியர் நியமன பணிகள் துவங்கும்,” என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

மிரட்டுகிறது பன்றிக்காய்ச்சல் : 90 ஆயிரம் பேர் பலியாகலாம்

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : “இந்தக் குளிர் காலத்தில், பன்றிக்காய்ச்சல் நோய் அமெரிக்காவின் பல பகுதிகளுக்கும் பரவி, 20 லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்படலாம்; 90 ஆயிரம் பேர் பலியாகலாம்’ என, வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.