மெட்ரிக் பள்ளிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை: தமிழைக் கற்பிக்காவிட்டால் அங்கீகாரம் ரத்து

posted in: கல்வி | 0

“மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில், தமிழ் கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும். அப்படி, தமிழை கற்பிக்காத பள்ளிகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டால், அந்தப் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்’ என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் மணி எச்சரித்துள்ளார்.

தனியாருக்கு ரயில்வே இடம் விற்பனையில் முறைகேடு : லாலு விவகாரத்தை கிளறுகிறார் மம்தா

posted in: அரசியல் | 0

புதுடில்லி : முந்தைய ஆட்சி காலத்தில், மத்திய ரயில்வேத் துறைக்கு சொந்தமான இடங்கள், சட்டவிரோதமாக தனியாருக்கு விற்கப்பட்டது தொடர்பாக, விசாரணை நடத்த, தற்போதைய மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

கந்து வட்டி கும்பல் பிடியில் மகளிர் குழுக்கள்: வட்டி கட்டியே ஓய்ந்து போகும் கொடுமை

posted in: மற்றவை | 0

மதுரை: மதுரையில் கந்து வட்டி கும்பல்களின் பிடியில் சிக்கி மகளிர் குழுக்கள் தவிக்கின்றன. வட்டி கட்டியே பல குடும்பங்கள் சிதைகின்றன. சொந்தக் காலில் பெண்கள் நிற்க வேண்டும்; பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டும்; சுய தொழில்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் துவக்கப்பட்டன. அரசே இக்குழுக்களை ஆதரித்து, வங்கி … Continued

பெண் தற்கொலை குண்டுதாரி ஒருவரை தேடி வலை வீச்சு: பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்

posted in: உலகம் | 0

கொழும்பு நகரில் பெண் தற்கொலை குண்டுதாரி ஒருவரை தேடி வருவதாக பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் (ரி.ஐ.டி.) தெரிவித்துள்ளனர்.

பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு இன்று வாழ்விலோர் திருநாள்: கருணாநிதி அறிக்கை

posted in: மற்றவை | 0

பல வருடங்களாக மூடிக்கிடந்த பெங்களூர் திருவள்ளுவர் சிலை இன்று திறக்கப்படுகிறது. இதையொட்டி மு.கருணாநிதி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:

டில்லியை அழிக்க வந்த பயங்கரவாதிகள் கைது

posted in: மற்றவை | 0

புதுடில்லி: சுதந்திர தினத்திற்கு முன்னதாக டில்லி உட்பட பல இடங்களில் தொடர் தாக்குதல்களை நடத்த, சதித் திட்டம் தீட்டிய ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இரண்டு பேர் டில்லியில் கைது செய்யப்பட்டனர்.

மின் இணைப்பு ‘ரீடிங்’ முறையில் வருகிறது மாற்றம் : செப். 1 முதல் புதிய முறை அமல்

posted in: மற்றவை | 0

கடந்த 27 ஆண்டுகளாக வீட்டு மின் இணைப்புகளில், “ரீடிங்’ எடுப்பதற்கான நடைமுறையை மாற்ற மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. புதிய நடைமுறையை செப்டம்பர் 1ம் தேதி முதல் சென்னையில் மட்டும் பரிசோதனை முறையில் அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, பில் தொகை கட்டுவதை எளிமையாக்கும் வகையில் பல நவீன வசதிகளும் சென்னை மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

தென் இந்தியாவில் ரூ. 100 கோடியில் பெர்ஜர் பெயின்ட் தொழிற்சாலை

சென்னை: ரூ.100 கோடி செலவில் தென் இந்தியாவில் புதிய யூனிட்டைத் துவக்குகிறது பிரபல பெயிண்ட் உற்பத்தி நிறுவனமான பெர்ஜர் பெயின்ட் இந்தியா.

விடுதலைப்புலிகள் அமைப்புக்கு மேலும் சிக்கல் : புதிய தலைவரையும் பிடித்தது இலங்கை ராணுவம்

posted in: உலகம் | 0

கொழும்பு : விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் செல்வராசா பத்மநாதனை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளதை அடுத்து, அந்த அமைப்புக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிரபாகரன் வீழ்ச்சிக்கு பின், மீண்டும் தலை தூக்க முயற்சித்த புலிகளுக்கு பலத்த அடி விழுந்துள்ளது.