மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் கணவன் மனைவிக்கு தூக்கு: பொடா நீதிமன்றம் தீர்ப்பு

posted in: கோர்ட் | 0

மும்பையில் 54 பேரை பலி வாங்கிய இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில் கணவன்-மனைவி உட்பட மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்து பொடா நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பை கேட்டு பெண் குற்றவாளி கதறி அழுதார்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் வங்கி ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை: பிரணாப் முகர்ஜி அறிவிப்பு

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை இன்று நடைபெறுவதாக பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படலாம் என தெரியவருகிறது.

காசு வாங்கி ஓட்டுப் போட்டால் கஷ்டத்தைத்தான் அனுபவிக்க வேண்டும் – விஜயகாந்த்

posted in: அரசியல் | 0

இளையாங்குடி: வாக்காளர்களே காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடாதீர்கள். அப்படி காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்டால் திரும்பத் திரும்ப கஷ்டத்தைத்தான் அனுபவிக்க நேரிடும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

வெறும் ரூ.63 கோடிக்கு 5 விமான நிலையங்களை தாரை வார்த்த மகாராஷ்ட்ரா!

மும்பை: மகாராஷ்ட்ரா மாநிலத்தின் 5 விமான நிலையங்களை வெறும் ரூ.63 கோடிக்கு அனில் அம்பானிக்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ளது அம்மாநில அரசு.

மருமகளை உதைத்தல், விவாகரத்து செய்வதாக மிரட்டுதல் குற்றமில்லை – சுப்ரீம் கோர்ட்

posted in: கோர்ட் | 0

டெல்லி: மருமகளை எட்டி உதைத்தல், விவாகரத்து செய்து விடுவோம் என்று மிரட்டுதல் போன்றவற்றில் ஈடுபடும் மாமியார், கணவர், அல்லது கணவர் குடும்பத்தாரின் செயல்களை கொடூரமான குற்றமாக கருத முடியாது. இதற்காக அவர்கள் மீது வழக்கு தொடர முடியாது என்று சுப்ரீம் கோர்ட் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி ராஜபக்ச மீது அதிருப்தி: அமெரிக்கா செல்ல சரத் பொன்சேகா முடிவு

posted in: உலகம் | 0

இலங்கை தரைப்படையின் முன்னாள் தளபதியும் கூட்டுப்படைத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகா நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்கா செல்வதற்கு தீர்மானித்துள்ளார் என நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூடுவாஞ்சேரி அருகே ரயில்வே கிராசிங்கில் பேருந்து சிக்கியதால் பரபரப்பு

posted in: மற்றவை | 0

சென்னை அருகே தண்டவாளத்தில் மாநகர பஸ் சிக்கிக்கொண்டது. அதிகாரிகளும் ஊழியர்களும் விரைந்து செயல்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் 45 நிமிடம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பயங்கரவாதிகளிடம் நவீன தொழில்நுட்பம்: ஏ.கே. அந்தோனி எச்சரிக்கை

posted in: மற்றவை | 0

பயங்கரவாதிகள் காலத்துக்குத் தகுந்தவாறு புதிய யுத்திகளை வகுத்தும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் தங்களை வலுப்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களின் செயல்பாடு நாளுக்கு நாள் கடுமையாக உள்ளது என்றார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி.

அம்பானி சகோதரர்களிடையே நடக்கும் சண்டைக்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : முரளி தியோரா

புதுடில்லி : இயற்கை எரிவாயுவை பகிர்ந்து கொள்ளும் விஷயத்தில் அம்பானி சகோததர்களிடையே நடந்து வரும் சண்டைக்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்களுக்கிடையே உள்ள சண்டையில் மத்திய அரசு எதுவும் செய்வதற்கும் இல்லை.

தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் பி.எட்., வகுப்பிற்கு அனுமதி மறுப்பு

posted in: கல்வி | 0

கம்பம்: தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் பி.எட்., உள்ளிட்ட படிப்புகளுக்கு தேசிய கவுன்சில் அனுமதி மறுத்துள்ளது.