தமிழகத்தில் பிஎஸ்என்எல் வைமேக்ஸ் சேவை!

சென்னை: இந்திய அரசின் தொலைபேசி நிறுவனமான பிஎஸ்என்எல் அடுத்து வைமேக்ஸ் பிராட்பேண்ட் சேவையில் களமிறங்குகிறது. இந்த சேவை மூலம் கேபிள் இல்லாமலேயே 3 மெகாபைட் வேகத்தில் இணையதள சேவையை வழங்க முடியும்.

கடத்தல் குழந்தைகளை மீட்க உதவிய ஆட்டோ டிரைவருக்கு போலீஸ் பரிசு

posted in: மற்றவை | 0

திருநெல்வேலி:குழந்தைகள் கடத்தலில் துப்புதுலக்க உதவிய திருச்சி ஆட்டோ டிரைவருக்கு நெல்லை எஸ்.பி., பரிசு வழங்கினார்.திருச்சி, கோவை, உடுமலை பகுதிகளில் கடத்தி நெல்லை மாவட்டம் வள்ளியூர் அன்பு சிறுவர் இல்லத்தின் மூலம் விற்பனை செய்யப்பட்ட 13 குழந்தைகள் மீட்கப்பட்டன. இதில் துப்புதுலக்க திருச்சி அரசு ஆஸ்பத்திரி ஸ்டாண்ட் ஆட்டோ டிரைவர் ஜோசப் உதவினார்.

மு.கருணாநிதி தலைமையில் கலைஞர் காப்பீட்டு திட்டம் நாளை தொடக்கம்

posted in: மற்றவை | 0

உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டு திட்டத்தினை மு.கருணாநிதி தலைமையில் குலாம் நபி ஆசாத் நாளை திறந்துவைக்கிறார்.

பெட்ரோல் டீசல் விலை குறையும்: மத்திய மந்திரி முரளிதியோரா

பெட்ரோல் டீசல் விலையானது கடுமையாக உயர்ந்துள்ளது. விரைவில் அவற்றின் விலையானது குறையுமென்று மத்திய மந்திரி முரளிதியோரா மறைமுகமாக கூறியுள்ளார்.

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஜூலை மாதத்தில் ரூ.2,880 கோடி நஷ்டமடையும்

புதுடில்லி : பெட்ரோலின் விலையை லிட்டருக்கு ரூ.4 ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 ம் உயர்த்தியும் கூட இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ஜூலை மாதத்தில் ரூ.2,880 கோடி வருமான இழப்பு ஏற்படும் என்று பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா தெரிவித் திருக்கிறார்.

தமிழக எம்.எல்.ஏ.,க்களின் மாத சம்பளம் ரூ.50 ஆயிரம்: சென்னையில் வீடு கட்ட மனை ஒதுக்கீடு

posted in: அரசியல் | 0

சென்னை: எம்.எல்.ஏ.,க்களுக்கான சம்பளம் 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டதுடன், அவர்களுக்கு சென்னைக்கு அருகே வீட்டு மனை ஒதுக்கவும் அரசு சம்மதித்துள்ளது.

சத்யம்… கைநழுவிய ரூ.100 கோடி ரயில்வே கான்ட்ராக்ட்

பெங்களூர்: இந்திய ரயில்வேயின் ரூ.100 கோடி லோகோமோடிவ் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் காண்ட்ராக்ட் சத்யம் நிறுவனத்தின் கை நழுநழுவிப் போய்விட்டது.

விப்ரோ லாபம் 12 சதவீதம் உயர்வு

விப்ரோ நிறுவனத்தின் லாபம் ரூ.1,016 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த காலாண்டை விட 12 சதவீதம் அதிகமாகும். ஆனால், அதன் சாப்ட்வேர் பி்ரிவின் லாபம் 3.3 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

ஆல்கஹால் சோதனை-மாட்டிய 29 பைலட்டுகள்!

posted in: மற்றவை | 0

டெல்லி: ஆல்கஹால் சோதனையில் 29 விமானிகள் மது அருந்திவிட்டு விமானங்களை இயக்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக சாராய அதிபர் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்தைச் சேர்ந்த பைலட்டுகளே இதில் அதிகமானவர்கள்.

தமிழக அரசின் மொத்த கடன் ரூ.74456 கோடி!

posted in: அரசியல் | 0

சென்னை: தமிழக அரசின் மொத்த கடன் தொகை ரூ. 74,456 கோடி என்று நிதியமைச்சர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார். சட்டசபையில் நிதித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளித்து அவர் கூறுகையில்,