போலீசுக்கு ஆள் தேர்வின் போது நெரிசலில் சிக்கி 2 பேர் பலி

posted in: மற்றவை | 0

உத்தரபிரதேச மாநிலம் சந்தோலி என்ற இடத்தில் போலீஸ் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அத்தேர்வில் கலந்துகொண்ட இருவர் நெரிசலில் சிக்கி இறந்துள்ளனர்.

தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு, அமெரிக்கா எல்லா உதவிகளும் செய்யும்: ஹிலாரி கிளிண்டன்

posted in: உலகம் | 1

இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் நிருபர்களுக்கு பேட்டியளித்த பொழுது தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியாவிற்கு அமெரிக்கா அனைத்துவித உதவிகளும் செய்யும் என்று கூறியுள்ளார்.

மி்ன் நிலையங்களுக்கு நிலக்கரி-2 நிறுவனங்களுடன் தமிழகம் ஒப்பந்தம்

சென்னை: தமிழக அனல் மின் நிலையங்களுக்கு தட்டுப்பாடின்றி நிலக்கரி பெற இரு நிலக்கரி நிறுவனங்களுடன் மின்வாரியம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் 20 ஆண்டுகளுக்கு அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்.

துணைவேந்தர்களை நீக்க சட்டத்தில் இடமில்லை :சொல்கிறார் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி

posted in: கல்வி | 0

சென்னை : “”துணைவேந்தர்கள் தவறு செய்திருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவோ, பதவி நீக்கம் செய்யவோ பல்கலைக் கழக சட்டத்தில் இடமில்லை,” என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

வங்கிகளில் ரூ.50,000 கோடி கடன் வைத்திருக்கும் கோவை, திருப்பூர் மாவட்ட தொழில் நிறுவனங்கள்

சென்னை : தென் தமிழ்நாட்டின் பெரிய தொழில் மாவட்டங்களான கோவை மற்றும் திருப்பூரில் இருக்கும் தொழில் நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகள், அங்குள்ள பலதரப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ரூ.50,000 கோடி வரை கடன் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ஈழத்தமிழர்களுக்கு தமிழக கல்லூரியில் இடம் உறுதி

posted in: கல்வி | 0

தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு இங்குள்ள கல்லூரிகளில் கல்வி வாய்ப்பு கிடைக்க வழி செய்யப்படும் என்று பேரவையில் நிதியமைச்சர் க.அன்பழகன் தெரிவித்தார்.

பெரியாறு அணை அருகே புதிய அணை: துபாய் நிறுவனத்திடம் கேரளா காண்ட்ராக்ட்

posted in: மற்றவை | 0

இடுக்கி: தமிழகத்தின் கடும் எதி்ர்பபையும் மீறி முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ள கேரள அரசு, இந்தப் பணியை துபாயைச் சேர்ந்த நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது.

கர்நாடகத்திற்கு தட்டுப்பாடின்றி உரம்: அமைச்சர் மு.க.அழகிரி தகவல்

posted in: அரசியல் | 0

மதுரை: “”கர்நாடகத்திற்கு காரிப் பருவத்திற்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும்” என மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகளின் கட்டண வசூலுக்கு கிடுக்கிப்பிடி: 7 ஆண்டு வரை சிறை தண்டனை கிடைக்கும்

posted in: கல்வி | 0

சென்னை: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளி கட்டணங்களை ஒழுங்குமுறைப்படுத்தும் புதிய சட்டத்தை, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தார். “தனியார் பள்ளிகளில் கட்டணங்களை நிர்ணயிப்பதற்காக, ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்டர்நெட் பயன்பாடு: மூன்றாம் இடத்தில் தமிழகம்

posted in: கல்வி | 0

சென்னை: மகாராஷ்டிரா மற்றும் டில்லிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் இன்டர் நெட் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கல்லூரிகள் அதிகம் உள்ளன. ஆந்திராவுக்கு அடுத்த படியாக இன்ஜினியரிங் கல்லூரிகள் தமிழகத்தில் அதிகம். கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் இந்த மாநிலத்தில் அதிகம் என்பதால் மாணவர்கள் அதிக அளவில் இன்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர்.