வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் தகவல் தொகுப்பு; ஆஸ்திரேலிய வன்முறைகளால் அரசு புதிய திட்டம்

posted in: மற்றவை | 0

புதுடில்லி: வெளிநாடுகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் விவரம் குறித்த முழு தகவல் தொகுப்பை சேகரிக்க முதல் தடவையாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீதான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்ட நிலையில், இம் முக்கிய முடிவை மத்திய அரசு எடுத்திருப்பதாக, மத்திய அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார். இதன் மூலம் வெளிநாடு செல்லும் இந்திய … Continued

எல்லையில் பாக். துப்பாக்கிச் சூடு-இந்திய வீரர் பலி

posted in: மற்றவை | 0

ஸ்ரீநகர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.

விரைவில் சுனாமி எச்சரிக்கை செயற்கைக்கோள்!

posted in: மற்றவை | 0

குலசேகரம்: சுனாமி மற்றும் புயல் எச்சரிக்கைகளை துல்லியமாக தெரிவிக்கும் ஓசன்சாட் செயற்கைகோள் இன்னும் இரண்டு வாரத்தில் விண்ணில் செலுத்துப்படும் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு போக வேண்டாம்-யு.எஸ். எச்சரிக்கை

posted in: மற்றவை | 0

வாஷிங்டன்: இலங்கையில் விடுதலைப் புலிகள் மிரட்டல் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. எனவே அங்கு அமெரிக்கர்கள் போவதைத் தவிர்க்க வேண்டும். அப்படியே செல்வதாக இருந்தாலும் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு கண்டிப்பாக போக வேண்டாம் என அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கலைக் கல்லூரி மாணவர்களுக்கும் பாலிடெக்னிக் பாடம்!

posted in: கல்வி | 0

சென்னை: இந்த ஆண்டு முதல் கலைக் கல்லூரிகளிலும் பாலிடெக்னிக் பாடங்கள் கற்பிக்கப்படும் என்று சட்டசபையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

கிளிநொச்சியை மீட்ட தளபதி பிரதித் தூதராகிறார்

posted in: மற்றவை | 0

வன்னியில், கிளிநொச்சியை மீட்கும் இராணுவ நடிவடிக்கையில் ஈடுபட்டிருந்த 57 ஆவது படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் ஜேர்மனியின் பிரதித் தூதராக நிய மிக்கப்பட்டுள்ளார்.

புலிகளின் நிழல் அரசை சர்வதேசம் அங்கீகரிக்காது : விநாயகமூர்த்தி முரளிதரன்

posted in: மற்றவை | 0

நாடு கடந்த நிலையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் நிழல் அரசாங்கத்தை சர்வதேச ரீதியில் எந்தவொரு நாடும் அங்கீகரிக்க மாட்டாது என்பதால் அதனை அமைப்பது என்பது முடியாத காரியம்”என தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

ராணுவத்துடன் நடந்த சண்டையில் பிரபாகரன் மகளும் பலி – பத்மநாதன்

posted in: மற்றவை | 0

லண்டன்: ராணுவத்துடன் நடந்த சண்டையின்போது விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவும் பலியாகி விட்டதாக புலிகள் இயக்கத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கூறியுள்ளார்.

உள்நாட்டு பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் தான் மிகவும் அதிகம்

posted in: மற்றவை | 0

மும்பை: உலகிலேயே இந்தியாவில் தான், உள்நாட்டிற்குள் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் அதிகம் உள்ளன. உலகின் பல்வேறு நாடுகளில் ஏராளமான பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. இவற்றில் சர்வதேச அளவிலான அல்-குவைதா போன்ற பயங்கரவாத அமைப்பு களும் அடக்கம்.