வணங்காமண் கப்பலை இலங்கை அனுமதிக்க நடவடிக்கை : எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு கருணாநிதி கடிதம்
இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் ஏற்றி வந்த வணங்காமண் கப்பலை இலங்கை அரசு அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.