தமிழக அரசு திட்டவட்டம்: மே மாதம் வரை மின்வெட்டு தொடரும்
தமிழகத்தில் அமலில் உள்ள 2 மணி நேர மின்சார வெட்டு மே மாதம் வரை தொடரும்” என்று மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் அமலில் உள்ள 2 மணி நேர மின்சார வெட்டு மே மாதம் வரை தொடரும்” என்று மின்துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்தார்.
தர்மபுரி :பென்னாகரம் தொகுதி தேர்தலில் பெண்களை கவர முடிவு செய்துள்ள பா.ம.க., ‘கோல்டு காயின்’ வழங்கிட ஆலோசனை செய்து வருகிறது.
லக்னோ:பகுஜன் சமாஜ் கட்சியின் வெள்ளி விழாவின் போது, மாயாவதிக்கு அணிவிக்கப் பட்ட பிரமாண்ட மாலையில், 22.5 கோடி ரூபாய் இருந்ததாக, காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடில்லி:”ஜெர்மன் பேக்கரியில் குண்டு வெடிப்பு நடப்பதற்கு முன், அது தொடர்பாக மாநில அரசை இரு முறை எச்சரித்திருந்தோம். இதையும் மீறி, அங்கு குண்டு வெடிப்பு நடந் தது, பாதுகாப்பு விஷயத்தில் கரும்புள்ளியை ஏற்படுத்தி விட்டது’ என, உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
சென்னை:””வந்தாரை வரவேற்று வாழ வைக்கும் மனவளம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு,” என முதல்வர் கருணாநிதி பூரிப்புடன் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் பென்னாகரம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அவர் பிரசாரம் செய்யும் ஊர்களின் பட்டியலை அ.தி.மு.க. தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது.
சென்னை:பா.ம.க.,வின் 8வது நிழல் பட்ஜெட்டை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், சென்னையில் நேற்று வெளியிட்டார். “வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும்’ என அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய பட்ஜெட்டில் விதிக்கப்பட்ட வரிகள் காரணமாக, பெட்ரோல்-டீசல் விலை உடனடியாக உயர்த்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் கூட்டணி கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தபோதிலும், இந்த முடிவில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
புதுதில்லி, மார்ச் 11: இந்திய முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 2 பேருக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. பணம் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
புதுடில்லி : “அதிகரிக்கும் பணவீக்கம், உள்நாட்டு சேமிப்பு, உள்கட்டமைப்பு போன்றவற்றை மன்மோகன் சிங் அரசு புறக்கணித்து விட்டது. இதன்மூலம் நாட்டின் பொருளாதாரத்தை கடும் நெருக்கடி நிலைமைக்கு தள்ளி விட்டது.