வறுமை குறைந்துள்ளது: மன்மோகன் சிங் விளக்கம்
புவனேஸ்வர்:”” புதிய பொருளாதாரக் கொள்கையால், நாட்டில் வறுமை அதிகரித்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை” என்று, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
புவனேஸ்வர்:”” புதிய பொருளாதாரக் கொள்கையால், நாட்டில் வறுமை அதிகரித்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை” என்று, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் தெலுங்கானா பிரச்சினை தீபற்றி எரிந்து கொண்டிக்கும் நிலையில், அம்மாநில கவர்னர் என்.டி.திவாரி மீது “செக்ஸ்” குற்றச்சாட்டு எழுந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான என்.டி.திவாரி (வயது86) 1980, 90களில் இந்திய அரசியலின் உச்சத்தில் இருந்தார்.
தெலுங்கானா இப்போது இல்லை என்று மத்திய அரசு அறிவித்ததால் நேற்று ஆந்திராவில் தெலுங்கானா பகுதியில் பயங்கர கலவரம் வெடித்தது.
சென்னை: தமிழக தொழில்துறையின் முழுமையான வழிகாட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய இணையதளத்தை, துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில், தமிழகம் முன்னிலையில் இருந்து வருகிறது. 2006 மே முதல் இதுவரை தமிழகத்தில் 46 ஆயிரத்து 91 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் உற்பத்தி தொழில்களில் வந்துள்ளன. இதன் மூலம், 2.20 லட்சம் பேருக்கு … Continued
ராஞ்சி, : ஜார்க்கண்ட் சட்டப் பேரவைக்கு நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால் தொங்கு சட்டப் பேரவை ஏற்பட்டுள்ளது. சிபுசோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்.) ஆதரவுடன் ஆட்சி அமைக்க காங்கிரசும் பா.ஜ.வும் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன.ஜார்கண்ட் சட்டப் பேரவையின் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு நவம்பர் 25ம் தேதி முதல் டிசம்பர் 18ம் தேதி … Continued
புதுடில்லி:”காங்., தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ராகுல் இடம் பெற வேண்டும்’ என, பிரதமர் மன்மோகன் சிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.உ.பி.,யில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டதற்காக, இந்த ஆண்டின் சிறந்த அரசியல் தலைவருக்கான விருது, தனியார் ஆங்கில “டிவி’ சேனல் சார்பில் காங்., பொதுச் செயலர் ராகுலுக்கு வழங்கப்பட்டது.
சென்னை: நான் பிறந்த அதே 1924ம் ஆண்டுதான் காவிரிப் பிரச்சினையும் முதன் முதலாக வெடித்தது. அன்று முதல் இன்று வரை அந்தப் பிரச்சினையுடன் நான் போராடிக் கொண்டிருக்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை: மெரீனா கடற்கரை, 26 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. கல்வெட்டு அருகே மரக்கன்றுகளை நட்டு, முதல்வர் கருணாநிதி நேற்று திறந்து வைத்தார்.
“நான் டில்லியில் இருக்கிறேனா… கோல்கட்டாவில் இருக்கிறேனா என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை; ஆனால், நள்ளிரவு 2 மணி வரை என் அமைச்சக வேலைகளை பார்க்கிறேன்,” என்று காட்டமாக லோக்சபாவில் பதிலளித்துள்ளார் மம்தா பானர்ஜி.
ஹைதராபாத்: ஆந்திராவை பிரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் விஜயவாடா காங்கிரஸ் எம்.பி. ராஜகோபாலின் உடல் நிலை மோசமானதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு நிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.