உரிய நேரத்தில் முடிவு மத்திய அரசுக்கு நன்றி
சென்னை : மீனவர் சட்டத்தை நடப்பு தொடரில் அறிமுகப்படுத்த மாட்டோம் என்று கூறியதற்காக மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத்பவாருக்கு நன்றி தெரிவித்து முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை : மீனவர் சட்டத்தை நடப்பு தொடரில் அறிமுகப்படுத்த மாட்டோம் என்று கூறியதற்காக மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத்பவாருக்கு நன்றி தெரிவித்து முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
புதுடில்லி : இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கை மக்கள் மத்தியில் வளர்த்த பெருமைக்கு சொந்தக்காரர். ரத யாத்திரை மூலம் இந்திய மக்களை சந்தித்து தனது இமேஜூம், பா.ஜ.,வை ஆட்சியில் அமர்த்த காரணமாக இருந்தவருமான அத்வானி, பிரதமர் பதவியில் அமருவார் என்ற எதிர்பார்ப்பு முடியாமல் போனது என்பது பெருவாரியான மக்களின் ஏகோபித்த எண்ணமாக எழுகிறது. லால் … Continued
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கலமசேரியில் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து தீவைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில், கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி விடுதலையான மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானியின் மனைவி சுபியா மதானி கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு உதவ முக்கிய கட்சிகள் மறுத்து விட்டன.
வந்தவாசி: தமிழக மக்களுக்கு நல்லது நடக்கும் என்றால் நிச்சயம் கூட்டணி வைக்கத் தயார் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறியுள்ளார்.
“தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற காங்கிரஸ் மேலிடத்தின் அறிவிப்பை எதிர்த்து, காங்., எம்.பி.,யும், ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகனுமான ஜெகன்மோகன் ரெட்டி, போர்க்கொடி தூக்கியுள்ளார்.
புதுடெல்லி : ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த அவசியமில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. தெலுங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து நான்காவது நாளாக நடக்கும் போராட்டத்தால் ஆந்திராவில் அரசு நிர்வாகம் முடங்கிப் போயுள்ளது.
சென்னை : தெலுங்கானாவைத் தொடர்ந்து, தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற பிரிவினை கோஷம் தமிழகத்தில் எழுந்தது. “தமிழகத்தைப் பிரிக்கும் எண்ணம் இல்லை’ என திட்டவட்டமாக அறிவித்ததன் மூலம், பா.ம.க., ராமதாசுக்கு முதல்வர் கருணாநிதி “பளீர்’ பதிலடி கொடுத்துள்ளார்.
பெங்களூர்: கர்நாடக மேலவை தேர்தலில் வெற்றி பெற குதிரை பேரம் நடக்கிறது. மேலவை தேர்தல் வாக்காளர்களான தாலுகா, கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் தனியார் ஓட்டல்கள், ரிசார்ட்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஐதராபாத் : தெலுங்கானா தனி மாநில விவகாரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. இதற்கிடையே, தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திராவில் நேற்று நடந்த, “பந்த்’ மற்றும் வன்முறை காரணமாக மாநிலம் முழுவதும் ஸ்தம்பித்தது.
ஐதராபாத் : தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கட்சி வேறுபாடு இன்றி, 93 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் ஆந்திராவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.