11 நாட்கள் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் சந்திரசேகர ராவ் : தனி தெலுங்கானா உருவாக்க மத்திய அரசு சம்மதம்
புதுடில்லி : ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு நேற்று ஒப்புதல் தெரிவித்தது. தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் நடத்திய தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மத்திய அரசு பணிந்தது. இதையடுத்து, சந்திரசேகர ராவ் தன் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.