சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் ஜனாதிபதி பிரதிபா நம்பிக்கை
புதுடில்லி:சந்திரனுக்கு ஆளில்லாத விண்கலமான சந்திரயான்1 அனுப்பி வைக்கப்பட்டது. விரைவில், சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பி வைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்,” என, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நம்பிக்கை தெரிவித்தார்.டில்லியில், இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச வர்த்தக கண்காட்சியை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் துவக்கி வைத்தார்.