முப்படை இருந்தும் பயனில்லை; மீனவர்களுக்கு தேவை துப்பாக்கி: தா.பாண்டியன் பேட்டி
ராமநாதபுரம்: இந்தியாவில் முப்படை இருந்தும் தமிழர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை என இந்திய கம்யூ., மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார். தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்க வலியுறுத்தி ராமநாதபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் கூறுகையில், “”தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து விரட்டி வருகின்றனர்.