விஜய்காந்த் இன்று உண்ணாவிரதம் : டில்லியில் விரிவான ஏற்பாடுகள்
இலங்கைக் கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, தே.மு.தி.க., தலைவர் விஜய்காந்த், டில்லியில் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்.
இலங்கைக் கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, தே.மு.தி.க., தலைவர் விஜய்காந்த், டில்லியில் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்.
புதுக்கோட்டை: “தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், தனியார் மருத்துவமனைகளில் பணியாற்ற தடை விதிப்பது குறித்து, பரிசீலனை செய்யப்படும்’ என, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
குன்னூர்: ரப்பர் உற்பத்தியில் தென்மாநிலங்களின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது; மொத்த ரப்பர் உற்பத்தியில் கேரளாவின் பங்களிப்பு மட்டும் 91.5 சதவீதமாக உள்ளது. தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கம் (உபாசி) தோட்டப்பயிர் சாகுபடி குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுடில்லி : பிரதமர் மன்மோகன் சிங் நான்கு நாள் பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார். அதில் சிக்கன திட்டமாக உடன் செல்லும் அதிகாரிகள் இருவர் குறைக்கப்பட்டனர். அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் நாளை மற்றும் நாளை மறுதினம், ஜி-20 உச்சிமாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறார். பொருளாதார நிபுணரான பிரதமர் மன்மோகன் … Continued
சென்னை: “முல்லைப் பெரியாறு அணை குறித்த செய்திகளைக் கண்டு குழப்பிக்கொள்ளத் தேவையில்லை’ என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள, “கேள்வி – பதில்’ அறிக்கை:
ஜிந்த்(அரியானா):”அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தவில்லை; பணக்காரர்களுக்காக ஆட்சி நடக்கிறது;’ என்று காங்., ஆட்சியை மாயாவதி கடுமையாக தாக்கியுள்ளார்.அரியானா மாநிலத்தில் அக்., 13ல் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையொட்டி, தனது கட்சியான பகுஜன் சமாஜ் கட்சிக்கு பிரசாரம் செய்வதற்காக, மாயாவதி அங்கு சென்றார்.
புதுடில்லி:பயங்கரவாத சவால்களை சமாளிக்க, நாட்டில் உள்ள 16 ஆயிரம் போலீஸ் நிலையங்களையும், ஒரே நெட்வொர்க்கின் கீழ் கொண்டு வரும், இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம், வரும் 2011-12ம் ஆண்டு செயல்பட துவங்கும் என, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
போலீஸ் படையை நவீனப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். போலீஸ் ஐ.ஜி.க்கள் மற்றும் டைரக்டர் ஜெனரல்கள் மாநாடு தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சென்னை:””தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம் மேற்கொள்ளும் ஆய்வின் பயன் உழவர்களைச் சென்றடைய ஏதுவாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில், 3,000 ஆயிரம் கால்நடைப் பணியாளர்கள் நியமிக்கப் படுவர்,” என தமிழக ஊரகத் தொழில் வளர்ச்சி மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி கூறினார்.
திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபா காந்தி தாய்சேய் நல மருத்துவமனையில், ‘‘மகளிர் சிறப்பு சிறுநீரியல், மகளிர் நோயியல் மற்றும் மகளிர் பிறப்பு பாதை மறுசீரமைப்பு உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு’’ திறப்பு விழா நேற்று நடந்தது.