57 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி குறைவு : திருவாரூரில் வேளாண் அமைச்சர் ‘திடுக்’
திருவாரூர் : பருவ மழை பொய்த்தது, மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாதது போன்ற காரணங்களால் திருவாரூர் மாவட்டத்தில் 57 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி குறைந்துள்ளது என்று, வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.