இந்த சாதனையையும் முறியடித்தார் சச்சின் : ஒன்டேயிலும் டபுள் செஞ்சுரி

குவாலியர் : தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த சச்சின், கான்வென்ட்ரி மற்றும் சயீத் அன்வர் ஆகியோரின் சாதனையையும் முறியடித்தார்.

இந்தியா ‘நம்பர்-1’ : தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி தக்க வைத்தது

கோல்கட்டா : டெஸ்ட் அரங்கில் “நம்பர்-1′ இடத்தை இந்திய அணி தக்கவைத்துக் கொண்டது. பரபரப்பான கோல்கட்டா டெஸ்டில், தென் ஆப்ரிக் காவை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சுழலில் அசத்திய ஹர்பஜன் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார். டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது.

ஜாகீர்கானின் பந்துவீச்சில் சுருண்டது வங்கதேசம் : இந்திய அபார வெற்றி

மிர்புர் : வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

இந்தியா சாதனை ஸ்கோர் : 414 ரன்கள் குவிப்பு

ராஜ்கோட் : இந்திய அணி ஒரு நாள் போட்டியில் அதிக பட்ச ரன் குவித்து சாதனை படைத்துள்ளது. ராஜ்கோட்டில் இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 414 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.

அடித்து நொறுக்கினார் சேவக் இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 443 ரன்

மும்பை: இலங்கை அணியுடனான 3வது டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட் இழப்புக்கு 443 ரன் குவித்து வலுவான நிலையில் உள்ளது. அதிரடி தொடக்க வீரர் சேவக் 284 ரன் விளாசி ஆட்டமிழக்காமல் உள்ளார்.

சாதித்துக் காட்டியது இந்தியா

கொழும்பு:இலங்கை மண்ணில் 11 ஆண்டுகளுக்குப் பின் முத்தரப்பு கோப்பை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது இந்திய அணி. சொந்த மண்ணில் கோப்பையை தவற விட்ட இலங்கை அணி சோகத்தில் ஆழ்ந்துள்ளது. 11 ஆண்டுகளுக்குப் பின்: முத்தரப்பு தொடரின் பைனலில் இலங்கையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி.

தர்மபுரியில் ரூ.90 லட்சத்தில் உள்விளையாட்டு அரங்கம்

தர்மபுரி: தர்மபுரியில் சர்வதேச இறகுப்பந்து போட்டி நடத்தும் வகையில், மாவட்ட விளையாட்டு அரங்கில் ரூ.90 லட்சத்தில் வீன உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. தர்மபுரி நகரின் மையப்பகுதியில் ஆறு ஏக்கரில் மாவட்ட விளையாட்டு அரங்கம் உள்ளது.

ஐசிசி விருதுகள்- டோணி உள்பட 6 இந்தியர்களின் பெயர்கள் பரி்ந்துரை

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் பல்வேறு விருதுகளுக்கு இந்தியாவைச் சேர்ந்த 6 வீரர்களின் பெயர்கள் பரி்ந்துரைக்கப்பட்டுள்ளன.

சூப்பர் சீரிஸ் சாம்பியன்: சாய்னா நெக்வால் சாதனை

இந்தோனேஷியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நெக்வால் சாம்பியன் பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்தார்.