பிராட்மேனை வென்றார் சச்சின்! *சிறந்த வீரருக்கான கருத்து கணிப்பில்..

மெல்போர்ன்: கிரிக்கெட் உலகின் சிறந்த வீரராக “சாதனை நாயகன்’ சச்சின் தேர்வு செய்யப்பட்டார். இதற்காக நடந்த கருத்துக் கணிப்பில் இவர், ஜாம்பவான் பிராட்மேனை முந்தினார். சச்சின் 67 சதவீத ஓட்டுகளை பெற்றார். பிராட்மேனுக்கு 33 சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.

தெ. ஆப்பிரிக்காவில் சச்சின் புதிய வரலாறு-50வது டெஸ்ட் சதம் போட்டார்

செஞ்சுரியன்: இந்திய கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் நேற்று புதிய வரலாறு படைத்தார். செஞ்சுரியன் மைதானத்தில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் மிக அருமையாக ஆடி தனது 50வது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்து புதிய சாதனை படைத்தார்.

டைம் இதழின் உலகின் டாப் 10 சிறந்த விளையாட்டுப் போட்டியில், சச்சினின் சாதனைப் போட்டி

லண்டன்: 2010ம் ஆண்டின் டாப் 10 சிறந்த விளையாட்டுப் போட்டி பட்டியலில், சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் அடித்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியும் இடம் பெற்றுள்ளது.

சாதித்துக் காட்டினார் செய்னா: ஹாங்காங் தொடரில் சாம்பியன்

வான்சாய்: ஹாங்காங் சூப்பர் சீரிஸ் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவில், இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவல் சாம்பியன் பட்டம் வென்று சாதித்தார்.

4-வது ஒரு நாள் போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

இந்தியா- நியூசிலாந்து மோதும் 4- வது ஒருநாள் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்தியா-நியூசிலாந்து மோதும் 5-வது ஒருநாள் போட்டி; சென்னையில் டிக்கெட் விற்பனை தொடங்கியது ரசிகர்கள் திரண்டனர்

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) பகல்-இரவாக நடக்கிறது.

உலகக் கோப்பை கால்பந்து: 2018ல் ரஷ்யா, 2022ல் கத்தார் நடத்தும்

சூரிச்: 2018ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை ரஷ்யா நடத்தவுள்ளது. அதே போல 2022ம் ஆண்டு போட்டிகளை கத்தார் நடத்தவுள்ளது.

இரண்டாவது ஒரு நாள் போட்டி: இந்தியா அபார வெற்றி

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

ஐ.பி.எல். போட்டி: கங்குலி, டிராவிட்டை நீக்க முடிவு; கொல்கத்தா, பெங்களூர் அணிகள் முடிவு

4-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதம் நடைபெறுகிறது. இதற்கான வீரர்கள் ஏலம் ஜனவரி மாதம் நடக்கிறது. இந்த ஏலத்தில் இந்திய வீரர்கள் 62 பேர் இடம் பெற்றுள்ளனர்.

சச்சின், தோனிக்கு ரூ. 1.84 கோடி: ஐ.பி.எல்., ஏலத்தில் விலை நிர்ணயம்

புதுடில்லி : நான்காவது ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஏலத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சச்சின், தோனி, சேவக் போன்றவர்களுக்கு 1.84 கோடி ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளனர். இந்த ஏலத்தில் 62 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.