அழிந்துபோன ‘யானைப் பறவை’ மீண்டும் வருகிறது: முட்டையில் இருந்து உயிர்ப்பிக்க முயற்சி
மடகாஸ்கர்:உலகின் மிகப் பெரிய பறவையாக கருதப்பட்ட “யானைப் பறவையான’ (எலிபண்ட் பேர்டு) 300 ஆண்டுகளுக்கு முன் பிரஞ்சு காலனிக்காரர்களால் அழிந்து போனது. மடகாஸ்கரை சேர்ந்த இந்த பறவையினம், அதன் பாதுகாக்கப்பட்ட முட்டையின் ஓட்டில் இருந்து எடுக்கப்படும் டி.என்.ஏ.,வின் மூலம் மீண்டும் உயிர் பெறலாம் என கருதப்படுகிறது.