சவுதி அரேபிய விசா பெற போலீஸ் சான்றிதழ் தேவை

posted in: உலகம் | 0

துபாய்: சவுதி அரேபியாவில் பணிபுரிய விரும்பும் இந்தியர்கள் தங்கள் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் பெறப்பட்ட ஒப்புதல் சான்றிதழ்களைத் தாக்கல் செய்ய வேண் டும். அப்போதுதான் சவுதி விசா கிடைக்கும். புதிய நிபந்தனை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

அனைத்து தோ்தல் வன்முறைகளுக்கும் மகிந்த ராஜபக்ச பொறுப்பு கூற வேண்டும்: சந்திரிக்கா

posted in: உலகம் | 0

அரசாங்கத்தின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து தேர்தல் வன்முறைச் சம்பவங்களுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முழுமையாக பொறுப்பு கூறவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

உளவுத் துறை அசட்டை: அமெரிக்கா கோபம்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்:”அமெரிக்க விமானத்தை நைஜீரிய நாட்டைச் சேர்ந்த வாலிபன் தகர்க்கப் போவதாக கிடைத்த தகவலை சில உளவு நிறுவனங்கள் மற்ற பாதுகாப்பு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளாதது பொறுத்துக் கொள்ள முடியாது. எதிர்காலத்தில் இதுபோன்று நடக்கக் கூடாது’ என, அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

தமிழ் மக்களை காப்பாற்ற கடவுளாக வந்தவர்தான் நமது தேசியத் தலைவர்: நாடுகடந்த தமிழீழ அரசின் கனடிய பிரிவின் தலைவர் ராம் சிவலிங்கம்

posted in: உலகம் | 0

நமது தமிழ் மக்களின் விடுதலைக்காக தார்மீக வழியில் போராடினார் தந்தை செல்வா அவர்கள். பல ஆண்டு காலமாக பயனேதும் கிடையாது போகவே கடவுளால்தான் எம்மைக் காப்பாற்ற முடியும் என்று கூறினார் அவர். அந்தக் கடவுளாக வந்தவர்தான் நமது தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசின் கனடிய பிரிவின் தலைவர் ராம் சிவலிங்கம் … Continued

150 கோடி ரூபா பெறுமதியான ஆயுதங்கள் கடலில் போடப்பட்டதாக கே.பியை மேற்கோள் காட்டி திவயின செய்தி வெளியிட்டள்ளது

posted in: உலகம் | 0

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கோரிய 150 மில்லியன் ரூபா பெறுமதியான ஆயுதங்கள் கடலில் போடபட்டதாக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த ஏராளமான மனித குண்டுகள் தயார்

posted in: உலகம் | 0

அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த ஏராளமான மனித குண்டுகள் தயார் நிலையில் ஏமனில் உள்ளதாக எஃப்.பி.ஐ. விசாரணையில் நைஜீரிய பயங்கரவாதி ஒமர் பாரூக் அப்துல் முத்தலிப் தெரிவித்துள்ளான்.

வன்னி பகுதியில் ஏராளமான கண்ணி வெடிகள் : தமிழர்களை குடியமர்த்துவதில் தாமதம்

posted in: உலகம் | 0

பெரியதம்பணை : அடர்ந்த காட்டுக்குள் கண்டறியப்பட முடியாத நிலையில், புலிகள் கண்ணிவெடிகளை புதைத்து வைத்திருப்பதால், அவைகளை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், இந்த பகுதிகளில் தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவதில், காலதாமதம் ஏற்படும், என ராணுவ முன்னாள் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அல்-கொய்தா தீவிரவாதிகள் எங்கிருந்தாலும் ஒழித்துக் கட்டுவோம்- ஒபாமா

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: தீவிரவாதிகள் உலகின் எந்த இடத்தில் இருந்துகொண்டு சதி திட்டங்களை தீட்டினாலும் அவர்களை அமெரிக்கா ஒழித்துக்கட்டும் என அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார்.

கிளிநொச்சி உட்பட தமிழர் பகுதிகளில் ஓட்டு வேட்டையாட பொன்சேகா முடிவு

posted in: உலகம் | 0

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில், எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடும் சரத் பொன்சேகா, முல்லைத் தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் தீவிர பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

ஈரானில் கலவரம் : 15 பேர் பலி !

posted in: உலகம் | 0

டெஹ்ரான்: ஈரானில் ஏற்பட்ட அரசுக்கெதிரான போராட்டத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமுற்றனர். அங்கு செய்தி சேரிப்பில் ஈடுபட்டிருந்த துபாய் டி.வி., நிருபர் ஒருவரை காணாமல் போய் விட்டார்.