தடுப்பு முகாமிலுள்ள போராளிகளை கூண்டோடு அழிக்க இலங்கை புலனாய்வுத்துறை சதி

posted in: உலகம் | 0

இலங்கை அரசஅதிபர் தேர்தலுக்கு முன்னதாக (ஜனவரி 26ம் நாளுக்கு முன்), இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான முன்னாள் போராளிகளைப் படுகொலை செய்வதற்கு இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவு திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க வீரரை கைதியாக பிடித்துள்ள தலிபான்

posted in: உலகம் | 0

காபூல்: அமெரிக்க படை வீரரை கைதியாக பிடித்துள்ளதாக தலிபான் பயங்கரவாதிகள் தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் . ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினர் பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிறிஸ்துமசை முன்னிட்டு 100 வயது பிரேசில் பாட்டி பாராசூட்டில் குதிக்கிறார்

posted in: உலகம் | 0

ரியோடி ஜெனிரோ : கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக கின்னஸ் சாதனை படைக்கும் நோக்கத்தில் பிரேசிலை சேர்ந்த 100 வயது பாட்டி, விமானத்தில் 4,000 மீட்டர் உயரத்தில் இருந்து பாராசூட்டில் குதித்து தரையிறங்க திட்டமிட்டுள்ளார்.

வட்டுக்கோட்டைத் தீர்மானமும் ‘கொட்டைப்பாக்கு’ வியாதிகளும்

posted in: உலகம் | 0

முள்ளிவாய்க்காலுடன் முடிந்துவிட்டதாகச் சிங்கள தேசம் எதிர்பார்த்த தமிழீழ விடுதலைப் போர் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்களால் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவது சிங்கள தேசத்திற்குத் தொடர் சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றது. இவ்வாறு ஈழநாடு (பாரிஸ்) இதழ் தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

கப்பல் உண்மையில் புலிகளுக்குச் சொந்தமானதா அல்லது பணம் கொடுத்து கொள்வனவு செய்யப்பட்டதா?: உறுதிப்படுத்துமாறு ஐ.தே.க. சவால்

posted in: உலகம் | 0

பின்ஸஸ் கிரிஸ்டினா கப்பல் உண்மையில் புலிகள் அமைப்பிற்குச் சொந்தமானதா அல்லது வேறு நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பலா என்பது தொடர்பில் சாட்சியத்துடன் நிரூபிக்க வேண்டும் என்று நாம் அரசாங்கத்திற்குச் சவால் விடுக்கின்றோம் என்று ஐக்கிய தேசியக் கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் விசாவில்பிரிட்டன் செல்லும் இந்தியர்கள் அதிகரிப்பு

posted in: உலகம் | 0

லண்டன்:படிப்பதற்காக செல்வதாகக் கூறி இந்தியர்கள் பலர், மாணவர்களுக்கான விசாவை பெற்று பிரிட்டனில் குடியேறுவது அதிகரித்துள்ளது.பிரிட்டனில் தங்குவதற்கு பல காரணங்கள் தேவை.

தமிழர்கள் குடியமர்த்தல் ரூ. 385 கோடி உதவி

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : முகாம்களில் வசிக்கும் தமிழர்களை மறு குடியமர்த்தும் பணிகளுக்காக, இலங்கைக்கு 385 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நாட்டை முன்னேற்ற நாம் பிரபாகரனின் பெற்றோரிடம் பணம் கேட்க மாட்டோம்: முதலாவது பிரசாரக் கூட்டத்தில் மஹிந்த

posted in: உலகம் | 0

இந்த நாட்டை முன்னேற்ற நாம் பிரபாகரனின் பெற்றோரிடம் பணம் கேட்க மாட்டோம். எமது விவசாயிகளின் உழைப்பால் நாட்டைக் கட்டியெழுப்புவோம். இவ்வாறு அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

விண்ணில் தண்ணீர், வெப்பத்துடன் இன்னொரு சூப்பர் பூமி

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: பூமியைப் போலவே நீர் நிறைந்த, அதைவிட 2.7 மடங்கு பெரிய Ôசூப்பர் பூமிÕ கிரகத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹார்வேர்டு பல்கலைக்கழக வானியல் பேராசிரியர்கள் நடத்திய ஆராய்ச்சியில் பூமிக்கு அருகே அதைவிட 2.7 மடங்கு பெரிதாக மற்றொரு கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இலங்கைக்கு, உலக வங்கி 77 மில்லியன் டொலர்கள் உதவி

posted in: உலகம் | 0

உலக வங்கி, இலங்கைக்கு 77 மில்லியன்கள் டொலர்களை உதவியாக வழங்கும் ஒப்புதலை அளித்துள்ளது. இந்த ஒப்புதல் நேற்று வாசிங்டனில் வழங்கப்பட்டது