பாக்.,கில் இந்தியாவை விட அதிக அணு ஆயுதங்கள்: பத்திரிகையில் புதிய தகவல்

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: “அணு ஆயுத உற்பத்தியில் பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனா இடையே சம அளவிலான போட்டி ஏற்பட்டுள்ளது. இதில், இந்தியாவை விட, பாகிஸ்தானில் அதிக அளவில் அணு ஆயுதங்கள் உள்ளன’ என்று, அமெரிக்க அணுசக்தி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

போர் வெற்றி-ராஜபக்சே படத்துடன் 1000 ரூபாய் நோட்டு

posted in: உலகம் | 0

கொழும்பு: விடுதலை ப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில், 1000 ரூபாய் நோட்டை வெளியிட்டுள்ளது இலங்கை மத்திய வங்கி. இதில் ராஜபக்சே மற்றும் ராணுவத்தினர் படம் இடம் பெற்றுளளது.

லைப்ரரிக்கு 51 ஆண்டுக்கு பின் திரும்பி வந்த 2 புத்தகங்கள்

posted in: உலகம் | 0

நியூயார்க் : அமெரிக்காவில் 51 ஆண்டுகளுக்கு முன் லைப்ரரியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட 2 புத்தகங்கள், ரூ.47,000 அபராத தொகையுடன் இப்போது பத்திரமாக தபாலில் திரும்பி வந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இடம் பெயர்ந்த தமிழர்கள் நலனுக்காக ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் பிரசாரம்

posted in: உலகம் | 0

கொழும்பு: இடம் பெயர்ந்தோர் முகாம்கள் என்ற பெயரில் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பக் கோரி ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பினரும், அதன் ஆதரவாளர்களும் உலகம் தழுவிய பிரசார இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர்.

பெயர் மாறி மீண்டும் உதயமான புதினம் இணையத்தளம்!

posted in: உலகம் | 0

வன்னி: ஈழத் தமிழர்கள் மட்டுமல்லாது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்ற புதினம் இணையத்தளம் தற்போது புதிய பெயரில் மீண்டும் உதயமாகியுள்ளது.

ஆப்கானிய அதிபர் முழுமையாக நிர்வாகத்தைப் பொறுப்பேற்காத வரை அமெ. உதவி கிட்டாது : ஹிலாரி

posted in: உலகம் | 0

ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாயும் அவருடைய அமைச்சர்களும் தமது நிர்வாகத்தை முழுமையாகப் பொறுப்பேற்காத வரையில், அமெரிக்கா கூடுதலான சிவிலியன் உதவிகளை வழங்காது”. இவ்வாறு அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் எச்சரித்துள்ளார்.

ரூ.1 கோடியில் பறக்கும் கார் அமெரிக்காவில் 2011ல் அறிமுகம்

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : சாலையில் ஓடுவதுடன், வானில் பறக்கும் வசதி கொண்ட பறக்கும் கார், அமெரிக்காவில் 2011ம் ஆண்டில் அறிமுகமாகிறது. அதன் விலை ரூ.1 கோடி. சாலையில் ஓடக்கூடிய, அதேநேரத்தில் வானிலும் பறக்கும் வசதி கொண்ட காரை அமெரிக்க நிறுவனமான டெர்ராப்யூஜியா தயாரித்து வருகிறது.

1 மணி நேர லெக்சருக்கு ரூ.82,000 10 வயது பொடியன் 2 கம்பெனிக்கு சி.இ.ஓ.

posted in: உலகம் | 0

கோலாலம்பூர், : மலேசியாவை சேர்ந்த 10 வயது பொடியன், 2 கம்பெனிகளுக்கு தலைமை செயல் அதிகாரியாக கலக்குகிறான். படிப்பை பாதியில் விட்ட அவனுக்கு, கல்லூரிகளில் 1 மணி நேரம் விரிவுரையாற்ற ரூ.82,000 தரப்படுகிறது.மலேசிய தலைநகர் கோலாலம்பூரைச் சேர்ந்தவர் செரியனா அலியாஸ்.

நவம்பர் 27 ல் மாவீரர் நாள் உரை நிகழ்த்த வருகிறார் பொட்டு

posted in: உலகம் | 0

மாவீரர் நாளுக்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில், அந்த நாளின் உரையை வாசிக்கப் போவது யார் என்ற பரபரப்பான கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்த ஆண்டு பொட்டு அம்மான்தான் இந்த வரலாற்றுப் புகழ்மிக்க உரையை வாசிக்கப் போகிறார் என்று ஆனந்த விகடன் வார இதழ் வெளியிட்டுள்ள கட்டுரை தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய ராணுவத்தை அழைக்க திட்டம் : சரத் பொன்சேகா திடீர் புகார்

posted in: உலகம் | 0

கொழும்பு : “ராணுவப் புரட்சி வெடிக்கும் என்ற பயத்தில், அதை அடக்குவதற்காக இலங்கைக்கு இந்திய ராணுவத்தை வரவழைப்பதற்கு, இலங்கை அரசு ஏற்பாடு செய்தது’என்ற பரபரப்புத் தகவலை, இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.