ஏ.கே.47 துப்பாக்கியைக் கண்டுபிடித்த கலஷ்னிகோவுக்கு 90 வயது – விருதளித்தார் ரஷ்ய அதிபர்
மாஸ்கோ: இன்று உலகெங்கிலும் உள்ள தீவிரவாதிகள், போராளிகள் கையில் நீக்கமற நிறைந்திருப்பது ஏ.கே.47 துப்பாக்கி. இதைக் கண்டுபிடித்த ரஷ்யாவைச் சேர்ந்த மிகயீல் கலஷ்னிகோவுக்கு 90 வயது பிறந்துள்ளது. இதையொட்டி அவருக்கு ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வதேவ் விருதளித்துக் கெளரவித்தார்.