அழிவுப்பாதையில் போகும் இலங்கை-பொன்சேகா

posted in: உலகம் | 0

வாஷிங்டன்: இலங்கை அழிவுப்பாதையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இதை நான் மாற்றி அமைப்பேன் என்று தனது கிரீன் கார்டு காலாவதியாகி விடாமல் காப்பாற்றிக் கொள்வதற்காக அமெரிக்காவுக்கு வந்துள்ள இலங்கை முன்னாள் ராணுவத் தளபதியும், கூட்டுப் படைத் தலைவருமான சரத் பொன்சேகா.

பலமாடிக் குடியிருப்பு வீடு : விலை 300 கோடி ரூபாய்

posted in: உலகம் | 0

ஹாங்காங் : பலமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டின் விலை 300 கோடி ரூபாய்; என்ன வியப்பாக இருக்கிறதா? உண்மை தான்.ஹாங்காங்கில் அமைந்துள்ள மிகப்பெரிய கட்டுமான நிறுவனம் ஒன்று இப்படி விலை வைத்து விற்றுள்ளது. இது உலகளவில் சாதனையாக கருதப்படுகிறது.

ராஜ் ராஜரட்னம் புலிகளுக்கு நிதிவழங்கினார்: கே.பி கூறுகிறார் – இலங்கை பாதுகாப்பு அமைச்சர்

posted in: உலகம் | 0

சமீபத்தில் நிதி மோசடி தொடர்பாக அமெரிக்க FBI யால் கைதான தொழிலதிபர் ராஜ் ராஜரட்னம், விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கினார் எனக் கே.பி கூறியுள்ளதாக, இலங்கை பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜீ.எஸ்.பி வரிச் சலுகை மறுக்கப்பட்டால் அரசாங்கமே அதற்கு பெறுப்பு சொல்ல வேண்டும் : மங்கள சமரவீர

posted in: உலகம் | 0

ஜீ.எஸ்.பி வரிச் சலுகை மறுக்கப்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய தாக்குதல் சதி அமெரிக்காவில் முறியடிப்பு : ஒருவர் கைது

posted in: உலகம் | 0

வாஷிங்டன் : அமெரிக்காவில் உள்ள வர்த்தக மையங்களில், மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்ட சதி முறியடிக்கப்பட்டது. வாலிபர் ஒருவர் கைது மூலம், இச்சதி முறியடிக்கப்பட்டதாக அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ., தெரிவித்துள்ளது.

இனவெறியை எதிர்த்து இந்தியப் பெண் ‘ஸ்கை டைவிங்’

posted in: உலகம் | 0

லண்டன் : பிரிட்டனில், “இனவெறி மற்றும் பாசிசம்’ ஆகியவற்றை எதிர்த்து போராட நிதி திரட்ட, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர், 14 ஆயிரம் அடிக்கும் அதிகமான உயரத்தில் இருந்து “ஸ்கை டைவிங்’ மூலம் குதித்து சாதனை படைக்க திட்டமிட்டு உள்ளார்.

ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது ஏன்? : கமிட்டி விளக்கம்

posted in: உலகம் | 0

லண்டன்:நோபல் பரிசு வழங்கும் நார்வேயை சேர்ந்த பரிசு கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்றுள்ள பராக் ஒபாமா (48), சர்வதேச அரசியலில் புதிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளார். ஒபாமாவின் முயற்சி காரணமாக, உலக நாடுகள் உடனான தூதரக உறவுகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

நாங்கள் இங்கு இறக்கப் போகிறோம், எங்களை விடுவியுங்கள் என்ற குரலே முகாம் முழுவதிலும் கேட்கிறது: பி.பி.ஸி. செய்தியாளர் விவரிப்பு

posted in: உலகம் | 0

குடிப்பதற்கு அல்லது குளிப்பதற்கு நீர் இல்லை. நாங்கள் இங்கு இறக்கப் போகிறோம். மெனிக் பார்ம் முகாம் எங்கிலும் எங்களை விடுவியுங்கள் என்ற பரிதாபக்குரலே முகாமகள் எங்கும் கேட்கிறது என, பிரிட்டனின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் மைக் டொஸ்டருடன் அங்கு விஜயம் மேற்கொண்ட பி.பி.ஸி.செய்தியாளர் சார்ள்ஸ் ஹவிலான்ட் தெரிவித்துள்ளார்.

ஆப்கனில் இந்திய தூதரகம் முன்பு குண்டுவெடிப்பு ; 14 பேர் பலி

posted in: உலகம் | 0

காபூல்: ஆப்கனில் உள்ள இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பில் 14 பேர் பலியாயினர். பலர் காயமுற்றனர். காலையில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கனில் உள்ள பயங்கரவாதிகள் இது போன்று அலுவலகத்தை குறி வைத்து தாக்குதல் நடத்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

போர்க்களத்தின் கடைசி நாளில் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, பொட்டு அம்மான் தற்கொலை: “த நேசன்” பத்திரிகை புதிய தகவல்கள்

posted in: உலகம் | 0

ஈழத்தில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது விடுதலைப்புலிகளின் உளவு பிரிவு தலைவர் பொட்டு அம்மான் தனது மனைவியை சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக இலங்கையின் ஆங்கில பத்திரிகையான “த நேசன்” செய்தி வெளியி்ட்டுள்ளது.