தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு, அமெரிக்கா எல்லா உதவிகளும் செய்யும்: ஹிலாரி கிளிண்டன்

posted in: உலகம் | 1

இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் நிருபர்களுக்கு பேட்டியளித்த பொழுது தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியாவிற்கு அமெரிக்கா அனைத்துவித உதவிகளும் செய்யும் என்று கூறியுள்ளார்.

மோசடி செய்த இந்திய தம்பதிக்கு அமெரிக்காவில் 5 ஆண்டு சிறை?

posted in: உலகம் | 0

ஹூஸ்டன் : அமெரிக்காவில் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட மருந்தை அதிகளவில் நோயாளிகளுக்கு கொடுத்த இந்திய டாக்டர் தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவ ரீதியாக மோசடி செய்த இவர்களுக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை அளிக்கப்பட உள்ளது.

புதிய ‘ஒப்பரேட்டிங் சிஸ்டம் ‘ஒன்றை அறிமுகப்படுத்த கூகுள் திட்டம்

posted in: உலகம் | 0

உலகின் முதன்நிலை இணைய தேடு தள நிறுவனமான கூகுள், புதிய ‘ஒப்பரேட்டிங் சிஸ்டம் ‘ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

யுஎஸ் பங்கு நிறுவன சர்வர்களை ‘ஹேக்’ செய்த 3 தமிழர்கள்

posted in: உலகம் | 0

நியூயார்க்: ஆன்-லைன் பங்கு வர்த்தக நிறுவனங்களின் சர்வர்களை ‘ஹேக்’ செய்து மற்றவர்களது கணக்கில் பங்குகளை வாங்கி தங்கள் கணக்கில் விற்று கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக 3 தமிழர்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

யாருக்கு வேண்டும் குழந்தை?: பாம்புகளோடு படுத்துறங்கும் தம்பதி

posted in: உலகம் | 0

லெபனான் நாட்டைச் சேர்ந்த பியர்ரி – சப்னா ரிஸ்க் தம்பதியினர் 13 பாம்புகளுடன் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்தப் பாம்புகள் தம்பதியினரின் படுக்கை அறை முதல் சகல இடங்களிலும் சுதந்திரமாகச் சுற்றி வருகின்றன. அவர்களுடைய உடலெங்கும் ஊர்ந்து செல்கின்றன. அவர்களும் அதை ரசித்து மகிழ்கின்றனர்.

சியர்ஸ் கட்டட கண்ணாடி பால்கனி: சிக்காகோ திகில்!

posted in: உலகம் | 0

உயரத்தைக் கண்டால் நடுநடுங்குபவர்கள் சிக்காகோ நகரில் உள்ள சியர்ஸ் டவர் பக்கம் வராமல் இருந்தால் நல்லது. அப்படி வந்துவிட்டால், அதை அண்ணார்ந்துப் பார்க்கும்போதே உயிரும் மேலே போனாலும் போய்விடும்.

மனதில் நினைத்தாலே நகரும் ‘வீல் சேர்!’

posted in: உலகம் | 0

டோக்கியோ :ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, இந்த நாற்காலி முன்னால் செல்ல வேண்டும், வலது புறம் திரும்ப வேண்டும் என மனதில் நினைத்தால் போதும், அப்படியே நாற்காலி நகரும் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?நம்பித் தான் ஆகவேண்டும்;

இந்திய மாணவர்கள் பாதுகாப்பு ஆஸி., பிரதமர் உறுதி

posted in: உலகம் | 0

மெல்பர்ன் : வெளிநாட்டு மாணவர்களின் பாதுகாப்புக்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும், என ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருத் மீண்டும் உறுதியளித்துள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருத் தலைமையில் நேற்று முன்தினம் உயர் மட்டக்கூட்டம் நடந்தது.

மகா பிராடு’ மேடாஃபுக்கு 150 ஆண்டு ஜெயில்!

posted in: உலகம் | 0

நியூயார்க்: உலகமகா மோசடிப் பேர்வழியான பெர்னார்டு மேடாஃப்புக்கு 150 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது அமெரிக்க நீதிமன்றம். மேலும் அவர் ரூ.170 பில்லியன்கள் வரை பொதுமக்களுக்கு செலுத்த வேண்டும் என்றும், அதை அவருக்கு சொந்தமான சொத்துக்கள், அவற்றிலிருந்து வரும் வருவாய், வட்டிகள் போன்றவை மூலம் ஈடுகட்ட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய மாணவருக்குதவ 24 மணி நேர ‘ஹெல்ப் லைன்’ சேவை : ஆஸியில் நடவடிக்கை

posted in: உலகம் | 0

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு உதவ 24 மணி நேர ‘ஹெல்ப் லைன்’ சேவை உருவாக்கப்படும் என்று அந் நாட்டு அரசு அறிவித்துள்ளது.