அங்கேரி
- அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது.
- உன் அன்பை மனைவியிடம் காட்டு; இரகசியத்தை அன்னையிடம் கூறு.
அயர்லாந்து
- அடிமைபோல் உழைத்திடு; அரசனைப்போல் வாழ்ந்திடு.
- எவன் ஒருவன் புகழை வெறுக்கிறானோ,அவனுக்கு உண்மையான புகழ் தானாகவே வந்தடையும்.
அல்பேனியா
- ஆயிரம் எதிரிகளைவிட ஒரு போலி நண்பனால்தான் அதிகத் தீமை.
- ஆயிரம் நூல்களைக் கற்பதைவிட அறிஞர்கள் கூறும் பழமொழிகளே அதிக அறிவைத் தரும்.
அர்மீனியா
- அச்சத்தைவிட மோசமானதொரு ஆலோசகர் இல்லை.
- எதுவும் தெரியாதவனுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
அரேபியா
- பற்களுக்கிடையில் மனிதன் மறைந்துள்ளான்.
- தண்டிப்பதற்கு அதிகாரம் பெற்றிருக்கும்போது மன்னிப்பதும் ஆகிய இரு வழிகளில் விவேகம் தோன்றுகிறது.
அமெரிக்கா
- ஆலயத்திற்கு அருகில் இருப்பவன்தான் தொழுகைக்குக் கடைசியாக வருவான்.
- உன்னிடம் வம்பளப்பவன் உன்னைப்ப்ற்றியும் வம்பு அளப்பான்.
ஆப்பிரிக்கா
- ஓர் ஆண்டின் களையெடுப்பு ஏழாண்டுகளின் விதை.
- அவர்கள் அவனைப் பிடிக்கும் நாள் வரை ஒவ்வொருவரும் நேர்மையானவரே!
இத்தாலி
- சிவந்த மை பூசிய பெண்கள் வெட்கப்படாதவர்களாகவும் இருக்கலாம்.
- விரும்பியதைப் பெறமுடிவில்லையானால் பெற்றதையே விரும்புவோமாக.