இங்கிலாந்து

  • அரசனைவிட பெண் அதிகத் தந்திரம் உள்ளவள்.
  • இன்று செயல்படுங்கள். இன்று சேமியுங்கள். இன்று நல்லது செய்யுங்கள். நாளை நன்கு ஓய்வு எடுக்கலாம்.

தொடர்ந்து படிக்க….

இஸ்ரேல்

  • அச்சம் இதயத்தின் சிறை.
  • அடுப்படியில் அடைகாக்கும் கணவன் அடிவயிற்றில் வலி.

தொடர்ந்து படிக்க….

இலங்கை

  • உரையாடல் பயணத்திற்கு ஏணி.
  • பொன்னாலான ஆயுதத்தால் குத்திய குத்தும், மற்ற எந்த ஆயுதங்களையும் போலவே வலி நிறைந்ததே!

தொடர்ந்து படிக்க….

எகிப்து

  • அவசரம் பிசாசின் குணம்.
  • இருவர் கூடியிருப்பது என்பது கிடையாது. இறைவனையும் சேர்த்து மூன்று பேர்.

தொடர்ந்து படிக்க….

எஸ்டோனியா

  • ஒரு பெண் மற்றொரு பெண்ணை ஒருபோதும் புகழ்ந்து பேசமாட்டாள்.
  • உயர்வான இடத்தைச் சுற்றிப் போ; தாழ்வான இடத்தைத் தாண்டிப் போ.

தொடர்ந்து படிக்க….

ஐரிஷ்

  • எவ்வளவு காலம் நீ வீட்டைவிட்டு வெளியே இருந்தாலும் நீ உன்னைப்பற்றி ஒரு கெட்ட கதையை வீட்டுக்கு கொண்டு வராதே!
  • வாயிலே உறவு, மனதிலே பகை.

தொடர்ந்து படிக்க….

கலிபோர்னியா

  • எவ்வளவு காலம் நீ வீட்டைவிட்டு வெளியே இருந்தாலும் நீ உன்னைப்பற்றி ஒரு கெட்ட கதையை வீட்டுக்கு கொண்டு வராதே!
  • வாயிலே உறவு, மனதிலே பகை.

தொடர்ந்து படிக்க….

கிரேக்கம்

  • எல்லாத் தீமைகளின் ஆதாரமும் குடி.
  • அவர்கள் உன்னைக் குடித்திருக்கிறாய் என்று சொல்லும்போது சுவரைப் பிடித்துக்கொள். போய்க்கொண்டே இரு.

தொடர்ந்து படிக்க….

சீனா

  • அறத்தின் வாசல் திறப்பதற்குக் கடினம். ஆனால், சுலபமாக மூடப்படாது.
  • தோண்டும் கலையில் ஒரு சுண்டெலிகூட தத்துவ ஞானிக்குப் போதிக்கலாம்.

தொடர்ந்து படிக்க….

சுவிட்சர்லாந்து

  • அழகுக்கும் கற்புக்கும் இடைவிடாத போர் இருந்துகொண்டே இருக்கும்.
  • ஆடவர் அழகை ஒரு குணமாகப் பார்க்கின்றனர். பெண்கள் குணத்தை ஒரு அழகாகப் பார்க்கின்றனர்.

தொடர்ந்து படிக்க….

ஜப்பான்

  • அறிவும் ஒழுக்கமும் வண்டியின் இரு சக்கரங்கள்.
  • அன்பிருந்தால் பெரும் குறைகளையும் பொறுத்துக்கொள்ள முடியும். அன்பு குறைந்து போய்விட்டால் சிறிய குறைகள் கூட மாபெரும் குறைகளாகத் தெரியும்.

தொடர்ந்து படிக்க….

ஜெர்மனி

  • அதிர்ஷ்டம் என்பவள் பலவீனமான கைகளையே பெற்றிருக்கிறாள். எவரை அவள் மேலே உயர்த்துகிறாளோ அவரை விரைவில் கீழே போட்டுவிடுகிறாள்.
  • அயலானை நேசி. அதற்காக அவளையும் உன்னையும் பிரித்து வைக்கும் வேலியைப் பிரித்து வீசாதே!

தொடர்ந்து படிக்க….

ஸ்காட்லாந்து

  • அறிவைவிட தைரியத்தினால்தான் பெரிய காரியங்கள் சாதிக்கப்படுகின்றன.
  • அநேக சமயங்களில் ஒரு மனிதனின் அறியாமைக்காக ஒரு நாடே துன்பப்படுகிறது.

தொடர்ந்து படிக்க….

ஹாலந்து

  • ஒருவனிடத்தில் பணம் இருக்கிறது. மற்றொருவனிடத்தில் பணப் பை இருக்கிறது. உலகில் இப்படித்தான் நடக்கிறது.
  • திருமணத்தை ஒரு முறை செய்துகொள்வது கடமை. இருமுறை செய்துகொள்வது முட்டாள்தனம். மும்முறை செய்து கொண்டாலோ பைத்தியக்காரத்தனம்.

தொடர்ந்து படிக்க….

பல்கேரியா

  • அவசர வேலை இரட்டிப்பு வேலை.
  • ஆண்களைவிட பெண்களுக்குப் பசி இரட்டிப்பு, புத்தி நான்கு மடங்கு, ஆசைகள் எட்டு மடங்கு.

தொடர்ந்து படிக்க….

பாரசீகம்

  • ஒவ்வொரு வியாதிக்கும் இறைவன் ஒரு மூலிகையைப் படைத்திருக்கிறார்.
  • ஒரு பவுண்டு அறிவைப் பெறுவதற்கு, பத்துப் பவுண்டு பகுத்தறிவைப் பெற வேண்டியிருக்கிறது.

தொடர்ந்து படிக்க….

பிரான்சு

  • ஆசை இல்லாத மனிதன் ஆத்ம மகனல்ல.
  • கண் மறைந்ததும் மனமும் மறைகிறது.

தொடர்ந்து படிக்க….

லத்தீன்

  • நாம் எப்போது ஆரம்பிப்பது என்று நினைக்கும்போது, அதுவே மிகுந்த தாமதமாகிறது.
  • அவர்களுடைய இழப்பிற்காக நான் துக்கப்படுகிறேன்.. ஆனால் மிக அதிகமாக நான் காலம் இழந்ததற்கே துக்கப்படுகிறேன். எவரும் தங்கள் பணப்பையைக் காத்துக்கொள்ள முடியும் ஆனால், இழந்துபோன காலத்தை ஒருவரும் மீண்டும் சொந்தமாக்கிக்கொள்ள முடியாது.

தொடர்ந்து படிக்க….

மியான்மர்

  • துறவிகள் மெலிந்தால் அழகு
    விலங்குள் கொழுத்தால் அழகு
    மனிதர்கள் படித்தால் அழகு
    பெண்கள் மணந்தால் அழகு
  • உன் ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தையையும் நம்பியிருந்தால் உனக்கு இரு கண்களும் இல்லை.

தொடர்ந்து படிக்க….

நைஜீரியா

  • ஆயிரம் தடைவை அளவு எடு. ஒரு தடவை வெட்டு.
  • இதயம்தான் ஒருவனை நரகத்திற்கு அல்லது சொர்க்கத்திற்குக் கொண்டு செல்கிறது.

தொடர்ந்து படிக்க….

இதர நாடுகள்

  • நன்கு உடுத்தினவர்களுக்கு கடவுள் குளிரைக் கொடுக்கிறார். ஆனால் குறைவான துணி உடையவர்களுக்கு கடவுள் சிறிதே குளிரைக்கொடுக்கிறார்.
  • முடிவில் என்னையே குறி வைக்காத ஒருவனுக்கும் நான் வில், கலை கற்றுக்கொடுக்கவில்லை.

தொடர்ந்து படிக்க….

இந்தியா

  • புலியின் குகைக்குள் உன்னால் நுழைய முடியாதென்றால் புலிக்குட்டிகள் உன்னிடம் சிக்காது.
  • மாற்றாருக்காக முள்வேலி அமைப்பவன் அதிலேயே மடிகின்றான்.

தொடர்ந்து படிக்க….

தமிழ்நாடு

  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
  • அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது.

தொடர்ந்து படிக்க….