கின்னஸ் பட்டியலில் இடம் பெற்றது ராமநாதபுரம் சகோதரர்களின் சாதனை

posted in: மற்றவை | 0

tbltnsplnews_2863276005ராமநாதபுரம்: ராமநாதபுரம் சகோதரர்களின் சாதனை கின்னஸ் பட்டியலில் இடம் பெற்று, அதற்கான சான்றிதழை அந்நிறுவனம் அனுப்பியுள்ளது. ராமநாதபுரம் கற்பக விநாயகம் கோவில் அர்ச்சகர் வெங்கட்ராமன், சரோஜா தம்பதியரின் மகன்கள் சுந்தர், சங்கரநாராயணன்.

கடந்த ஜனவரி 31ல் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில், சுந்தர் 398 “ஸ்ட்ராக்களை’ வாய்க்குள் நுழைத்து சாதனை செய்தார்.
அவரது தம்பி சங்கரநாராயணன் 2008 ஜனவரி 18ல் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ஒரே மூச்சில் 151 எரியும் மெழுகுவர்த்திகளை ஊதி அணைத்து சாதனை செய்தார். இந்த இரண்டு சாதனைகளும் கின்னஸ் சாதனைக்காக அனுப்பப்பட்டன. பரிசீலனைக்குப் பின், ஜெர்மனியின் சைமன் எல்மோர் செய்த சாதனையை முறியடித்த சுந்தர், ஒரே மூச்சில் மெழுகுவர்த்தியை அணைத்த அவரது தம்பி சங்கரநாராயணனின் சாதனைகள், கின்னஸ் சாதனையில் அங்கீகரிக்கப்பட்டதாக அந்நிறுவனம் இருவருக்கும் சான்றிதழ் அனுப்பியுள்ளது. அதை கலெக்டர் ஹரிஹரன் நேற்று இருவருக்கும் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *