ஒரே மாதத்தில் 290,000 வேலைகள்… அமெரிக்காவின் ஜிவ் வளர்ச்சி!

08-jobs1200வாஷிங்டன்: வேலைவாய்ப்பு விஷயத்தில் மீண்டும் தன் பழைய பரபரப்புக்குத் திரும்புகிறது அமெரிக்கா [^].

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டுமே 2,90,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

கடந்த நான்காண்டுகளில் ஆறுதலளிக்கும் முதல் செய்தி இதுவே என அமெரிக்கர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இன்னொரு பக்கம் வேலையின்மையின் அளவும் இரட்டை இலக்கத்திலிருந்து 9.9 சதவீதம் என ஒற்றை இலக்கத்துக்கு இறங்கி வந்துள்ளது.

உற்பத்தித் துறை, மருத்துவத் துறை என பல துறைகளில் இதுவரை 8,05,000 பேர் மீண்டும் வேலைக்குத் திரும்பியுள்ளனர். கடந்த பிப்ரவரியில் 1,20,000 பேருக்கு வேலை அளிக்கப்பட்டது.

விரைவில் அமெரிக்க காங்கிரஸுக்கு தேர்தல் [^] வரவிருப்பதால், வரும் மாதங்களில் அதிக அளவு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் குறியாக உள்ளது ஒபாமா நிர்வாகம்.

அமெரிக்கப் பொருளாதாரம் [^] வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பினாலும், நிறுவனங்கள் வேலைக்கு ஆளெடுப்பதில் தயக்கம் காட்டின. இப்போது நிலைமை நம்பிக்கை தரும் அளவுக்கு மேம்பட்டுள்ளதால், மீண்டும் அதிக அளவு ஆட்களை எடுக்க ஆரம்பித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *