சென்னை : ‘மிஷனரீஸ் ஆப் சாரிட்டி’ என்ற அமைப்பைத் துவக்கி சமூக சேவை செய்து வந்த அன்னை தெரசாவின் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தெரசாவுக்கு ஏற்கனவே நோபல் பரிசு, பாரத ரத்னா விருது போன்ற பல உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர் உருவம் பொறித்த நாணயத்தையும் வெளியிட வேண்டும் என, சென்னையில் இயங்கும் அன்னை தெரசா அறக்கட்டளை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை வைத்தன. இந்த கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, ‘தெரசாவின் நூற்றாண்டு தினமான ஆகஸ்ட் 26ம் தேதி, அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்படும்’ என அறிவித்துள்ளது. இதற்கான நிகழ்ச்சி, அன்னை தெரசா நூற்றாண்டு விழாவாகவும், நாணய வெளியீட்டு விழாவாகவும் கோல்கட்டாவில் நடத்தப் படுகிறது.
Leave a Reply