வாஷிங்டன்:அமெரிக்க மக்கள், தற்போதைய அதிபர் ஒபாமாவை விட, முன்னாள் அதிபர் பில் கிளின்டனை தான் பெரும்பாலனோர் விரும்புகின்றனர்.
அமெரிக்காவின் முன்னணி ஆய்வு நிறுவனம் ஒன்று, அமெரிக்க முன்னாள் அதிபர்கள் மற்றும் தற்போதைய அதிபரில், யாருக்கு செல்வாக்கு அதிகம் உள்ளதென்பது குறித்த ஆய்வை சமீபத்தில் நடத்தியது.இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:முன்னாள் அதிபர் பில் கிளின்டனுக்கு தான், தற்போது அமெரிக்க மக்களிடையே செல்வாக்கு அதிகம் உள்ளது. 61 சதவீதம் பேர், கிளின்டனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.இந்த வரிசையில், அமெரிக்க மக்களின் ஏகோபித்த வரவேற்புக்கு இடையே கடந்தாண்டு அதிபராக பொறுப்பேற்ற ஒபாமாவுக்கு, 2ம் இடம் தான் கிடைத்துள்ளது. அவருக்கு ஆதரவாக 52 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.இதன் மூலம், ஒபாமாவின் செல்வாக்கு முதல் முறையாக அமெரிக்க மக்களிடையே வீழ்ச்சியடைந்துள்ளது. அதே நேரத்தில், கடந்த 2008ல் இருந்து நடத்தப்பட்ட ஆய்வுகளில், கிளின்டனுக்கு, தற்போது மீண்டும் செல்வாக்கு பெருகியுள்ளது.இந்த ஆய்வில் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் 3ம் இடம் பிடித்துள்ளார். இவருக்கு ஆதரவாக 45 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply