சாணக்கியர் கி.மூ.4 ம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த ஆசிரியர், தத்துவவாதி, பொருளாதார நிபுணர், நீதிபதி மற்றும் அரச ஆலோசகர் ஆவார். பண்டைய இந்திய அரசியல் நூல் எழுதியவர். இவர், இந்தியாவின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளின் முன்னோடியாக கருதப்படுகிறார். அவரது பணிகள், பாரம்பரிய பொருளாதாரத்திற்கு ஒரு முன்னோடியாகக் கருதப்படுகிறது. இவரது படைப்புகள் குப்த சாம்ராஜ்யத்தின் முடிவில் பொலிவிழந்தன. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவை மீண்டும் பழக்கத்திற்கு வந்தன. இவருக்கு கௌடில்யர், விஷ்ணுகுப்தர் போன்ற வேறு பெயர்களும் உண்டு.
மௌரியப் பேரரசைத் தோற்றுவித்த சந்திரகுப்த மௌரியனின் முதன்மை அமைச்சராகவும் வழிகாட்டியாகவும் இருந்தவர் சாணக்கியர். இவர் மௌரியப் பேரரசு அமைவதற்கு முக்கிய காரணமானவர். ஈடு இணை அற்ற அரசியல் இலக்கியமான அர்த்தசாத்திரத்தைப் படைத்தவர் இவரேயாவார். இவர் பொருளியலின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். மேற்கத்திய உலகில் இவர் இந்தியாவின் மாக்கியவெல்லி என்று அறியப்படுகிறார். இவர் தக்சசீலப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார். சாணக்கியரின் இன்னொரு பெயர் கௌடில்யர்; அர்த்தசாத்திரம் கௌடில்யம் எனவும் வழங்கப்படுகிறது. இந்திய வரலாற்றிலேயே இவரைப் போன்ற சிறந்த அரசியல் ஆலோசகர் வேறு யாரும் இருக்க முடியாது. பெண்களைப் பற்றிய இவரது சிந்தனை பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கும்.
பிராமணர் வகுப்பை சேர்ந்தவர் சாணக்கியர். இவர் பிறக்கும் போதே பற்களுடன் பிறந்தார் என்று கூறப்படுகிறது.துறவி ஒருவர், இவரது வீட்டிற்கு தானம் கேட்டு வரும் போது, சாணக்கியரின் தனித்துவ நிலையை அறிந்து, அந்த துறவி சாணக்கியரின் தந்தையிடம், இக்குழந்தை உலகே வியக்கும் வண்ணம் மன்னராகும் என்று கூறினார். ஆனால் ஆசிரியரான சாணக்கியரின் தந்தை, தனது மகனுக்கு இப்படி ஒரு ஆபத்தான வாழ்வு வேண்டாம் என நினைத்து, இருந்த பற்களை உடனே பிடுங்கிவிட்டார். இதைக் கண்ட துறவி, இக்குழந்தை மன்னராகாவிட்டாலும், ஒரு ஆட்சியை நியமிப்பவனாக ஆவான் என்று கூறினார்.
சாணக்கியர் தனது படிப்பை பழம்பெரும் தக்ஷஷீலா பல்கலைகழகத்தில் முடித்தார். இந்த இடம் தற்போது பாகிஸ்தானில் அமைந்துள்ளது. அப்போது இந்த பல்கலைகழகம் தான் உலகிலேயே மிகச்சிறந்த பாடசாலையாக இருந்தது. அலெக்சாண்டர் இந்தியாவைப் படையெடுத்து வரும் போது, அப்படையை எதிர்த்துப் போராடி இந்தியாவுடன் இணைத்தவர். அதுவும் தனது 19 வயதிலேயே சந்திரகுப்த மௌரியரின் உதவியுடன் மிகப்பெரிய இந்திய பேரரசை உருவாக்கியவர் சாணக்கியர்.
சாணக்கியரின் அர்த்தசாஸ்திரமானது, மரபு ரீதியாக, இயல்புத்தன்மை, மாறாமல் பல அறிஞர்களால் கற்பிக்கப்பட்டது. அர்த்தசாஸ்திரத்தில், விஷ்ணுகுப்தா என்ற பெயரால் சாணக்கியரைக் குறிக்கும் ஒரு வசனம் தவிர, மற்ற பகுதிகள், அதன் ஆசிரியர் கௌடில்யர் என்பவரை அடையாளம் காட்டுகின்றன. கௌடில்யா என்பது ஆசிரியரின் பொது முன்னோரை உடைய கூட்டுக்குழுத் தோழர் எனக் குறிப்பிடப்படுகிறது.
கௌடில்யர் அல்லது விஷ்ணுகுப்தர்
கி. மு. 3 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட விஷ்ணு சர்மாவின் முற்கால சமஸ்கிருத இலக்கியமான பஞ்சதந்திரம், விஷ்ணுகுப்தாவுடன் சாணக்கியருக்குள்ள தொடர்பை அடையாளம் காட்டுகிறது. கௌடில்யருடன் விஜயகுப்தரும் பாரம்பரிய அடையாளமாகக் கருதப்படுகிறார். இது உரை ஆசிரியர்களுக்கு முன்னோடி யார் என்பதில் குழப்பம் விளைவிக்கிறது என்றும், கவுதிலியரின் பணிகளின் மறுகட்டமைப்பாக விஷ்ணுகுப்தர் செயலாற்றினார் என்றும் வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். சாணக்கியர் மற்றும் கௌடில்யர் இருவரும் வேறு வேறு மக்களாக இருக்கலாம் என்று தாமஸ் புரோவ் கூறுகிறார்.
அரசியல்
சாணக்கியர் சந்திரகுப்த மௌரியருக்கு ஆசிரியராக விளங்கினார். இவர் சந்திரகுப்தர் மற்றும் பிந்துசாரர் ஆகியோரின் நீதிமன்றங்களில் பணியாற்றினார். ஜார்ஜ் மாடெல்ஸ்கி கருத்துப்படி, மௌரிய சாம்ராஜ்யத்தை நிறுவிய சந்திரகுப்தருக்கு முதன்முதலில் முதலமைச்சராகப் பணியாற்றிய கௌடில்யர் என்ற பிராமணரே, சாணக்கியர் என நம்பப்படுகிறார்
இலக்கியப் பணிகள்
சாணக்கியரின் இரண்டு புத்தகங்களின் இயல்புத்தன்மை: அர்த்தசாஸ்திரம் மற்றும் சாணக்கிய நீதி, இது சாணக்கிய நீதி-சாஸ்திரா என்றும் அறியப்படுகிறது.அர்த்தசாஸ்திரமானது, நிதி மற்றும் நிதிக் கொள்கைகள், நலத்திட்டஙள், சர்வதேச உறவுகள் மற்றும் போர் உத்திகள் போன்றவற்றைப் பற்றி விரிவாக விவாதிக்கிறது. இந்த உரை ஆட்சியாளரின் அனைத்துக் கடமைகளையும் முழுமையாகக் கோடிட்டுக்காட்டுகிறது. அர்த்தசாஸ்திரம் என்பது உண்மையில் பல முந்தைய நூல்களின் தொகுப்பாக இருக்கும் என்றும், சாணக்கியர் இந்த ஆசிரியர்களில் ஒருவராக இருந்திருக்கலாம் எனவும் பல அறிஞர்கள் நம்புகின்றனர்.சாணக்கிய நீதி என்பது, பல்வேறு சாஸ்திரங்களிலிருந்து சாணக்கியரால் தேர்ந்தெடுக்கப்பட்ட, சூத்திரம், மணிமொழி மற்றும் முதுமொழி விளக்கத் தொகுப்பாகக் கருதப்படுகிறது.
படைப்புகள்
இவர் அர்த்தசாத்திரம், நீதிசாத்திரம் ஆகிய நூல்களைப் படைத்துள்ளார். அர்த்தசாத்திரம், பொருளாதாரக் கொள்கைகள், நலத்திட்டங்கள், பிற நாட்டு உறவுகள், போர்முறைகள் குறித்து விரிவாக விவரிக்கிறது. நீதி சாத்திரம் வாழ்வியல் நன்னெறிகள் பற்றிப் பேசுகிறது. இந்நூல் இந்திய வாழ்க்கை முறைகள் குறித்துச் சாணக்கியருக்கு இருந்த அறிவைக் காட்டுகிறது. இந்நூல் சாணக்கிய நீதி என்றும் அழைக்கப்படுகிறது.
சாணக்கியர் பற்றிய சுவையான கதைகள்
பிற்காலத்தில் அரசனாவார் என்பதைக் குறிக்கும் வகையில் பிறக்கும் போதே பற்களோடு பிறந்தார். அந்தணர்கள் அரசாள்வது முறையற்றது என்பதால் இவரது பற்கள் உடைக்கப்பட்டன. அதனால் இவர் வேறொருவன் மூலம் அரசாள்வான் என்று கணிக்கப்பட்டது. நந்த அரசன் சாணக்கியரை அவையிலிருந்து வெளியேற்றியதே இவரை பழிதீர்க்கும் உறுதியேற்கக் காரணம்.
தம் விருப்பப்படி ஆட்சி நடத்தத் தகுதியான ஒருவனைத் தேடி, இறுதியில் சந்திரகுப்தனைத் தேர்ந்தெடுத்தார்
நந்த அரசனை வீழ்த்தும் முதல் முயற்சியில் தோல்வி அடைந்தார். சூடான அப்பத்தை, ஓரத்திலிருந்து புக்காமல் நடுவில் கைவைத்துக் கையைச் சுட்டுக்கொண்ட மகனைத் திட்டும் ஒரு தாயைக் கண்ட போது தம் தவற்றை உணர்ந்தார்.
சந்திரகுப்தன் மன்னனாக இருந்த போது அவனுடைய உணவில் நஞ்சைச் சேர்த்து (அவனறியாமல்) உண்ணச் செய்தார். அவன் உடலின் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க இவ்வாறு செய்தார். இதையறியாத மன்னன் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தன் மனைவிக்கு தன் உணவை ஒரு நாள் கொடுத்தான். இதையறிந்த சாணக்கியர் அரசகுல வாரிசைக் காப்பதற்காக அரசியின் வயிற்றைப் பிளந்து குழந்தையை வெளியே எடுத்தார். அவனுக்கு பிந்துசாரன் என்று பெயரிட்டார்.
ஒரு முறை மௌரியப் படை ஒரு குகையில் ஒளிய நேர்ந்தது. அவர்களிடம் உணவு இல்லாததால் அனைவரும் பசியால் வாடினர். அப்போது சாணக்கியர் ஓர் எறும்பு ஒற்றைச் சோற்றைச் சுமந்துக்கொண்டுச் செல்வதைக் கவனித்தார். அவர்களைச் சுற்றி எங்கும் உணவு தென்படவில்லை. எனவே வீரர்களைக் குகையைச் சோதனை செய்யப் பணித்தார் சாணக்கியர். எதிரிகள் குகைக்குக் கீழே உணவருந்திக் கொண்டிருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். உடனே வீரர்களோடு இவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இறுதிகாலம்
சாணக்கியர் தன இறுதி காலத்தில் மௌரியப் பேரரசில் இருந்து விலகி இமயமலைக்கு சென்று கழித்தார் என்று நம்பப்படுகிறது.
Leave a Reply