நியூயார்க்:”மியான்மர் அரசு, மிகவும் வெளிப்படையான, பரந்து விரிந்த ஒரு ஜனநாயக நடைமுறைக்கான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, ஐ.நா., தூதர் நம்பியார் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தேர்தல் நடந்த மியான்மருக்கு, ஐ.நா., சார்பில் சிறப்பு தூதராக விஜய் நம்பியார் சென்று வந்தார். அங்கு ராணுவ அதிகாரிகளையும், வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட அவுங் சான் சூச்சியையும், பொதுமக்களையும் அவர் சந்தித்து பேசினார்.
இதுகுறித்து நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:முன்பு ஐ.நா., சார்பில் யாங்கூன் சென்றால், பொதுமக்களை அத்தனை எளிதாக சந்திக்க விடுவதில்லை. கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். தற்போது இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. சந்திக்க விரும்பிய மக்களை எளிதில் சந்திக்க முடிந்தது. சூச்சியையும் சந்தித்து பேசினேன்.சமீபத்தில் நடந்த தேர்தலில் சில கட்சிகள் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் மாற்றம் வேண்டும். மியான்மர் அரசு, வெளிப்படையான, பரந்து விரிந்த ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். சமீபத்திய தேர்தலை புறக்கணித்த கட்சிகளும், அதில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு நம்பியார் கூறினார்.
Leave a Reply