1.) எனக்கென்று சில இதயங்கள்
சேர்த்துவைத்த கண்ணீரைச் சிறையிட்டு நான் பெற்றேன் தெளிந்த ஞானம்.
விரக்திநதிக் கரைகளிலே விழிமூடி படுத்தப்படி விம்மிப் போனேன்.
அரக்கமனம் இதம்காண ஆசைகளால் பந்தலிட்டும் அர்த்தங்காணேன்.
இரக்கமிலாத் தோல்விகளை எனையணைக்க வைத்தபடி இளைத்து போனேன்.
மரணமகள் காதலினி மண்டியிட்டு நான் பெறுவேன் மறக்க மாட்டேன்.
2.) முதிர்கன்னி
இறந்த பின்னே தாஜ்மகால் வேண்டாம்..
இருக்கும் போதே ஒரு குடிசை கொடு..
3.) அது எந்தத் தை?
ஏழைவைத்த வாழைமரம் இருபுறமும் குலைதள்ளும்
நாளைவரும் அவனுக்கு நல்லதொரு புதுவிடியல்
இப்படியோர் பூங்கனவில் எத்தனையோ யுகங்கழிந்தும்
அப்படியோர் பொற்பொழுது அவன்வானில் ஏனில்லை?
இப்படி ரசித்த வரிகளை மேற்க்கோல் காட்டிக்கொண்டே போகலாம். வாழ்க்கையின் பல நிறங்களை கவிதையில் புகுத்த வைரமுத்து அடிக்கடி இயற்கையை துணைக்கு அழைத்துக்கொள்கிறார். அதை எளிமையாகவும் எழுதும் போது, பாமரனுக்கும் கவியின் அழகு கொண்டுசேர்க்க படுகிறது.
இன்றைய காலத்தில் வைரமுத்து சர்ச்சைக்குரிய நபர். முக்கியமாக மீடு விவகாரத்தினால். ஆனால் குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகு நாம் அவரை வசை பாடுவதை வைத்துக்கொள்ளலாமே? இன்று பாராட்டுவதில் எந்த தப்பும் இல்லை என்பது என் கருத்து.
கட்டாயம் வீட்டில் வைத்து அவ்வபோது திருப்பி பார்க்க வேண்டிய நூல். அடிக்கடி நம்பிக்கையை தொலைக்கும் மனித மனதுக்கு இது தகுந்த மருந்து.
Leave a Reply