டோக்கியோ : குறையுள்ள சுமார் ஒரு கோடி கார்களைத் திரும்பப் பெறும் அறிவிப்பால் டொயோட்டாவுக்கு ரூ.9,200 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
காரின் தரைவிரிப்பில் ஆக்சிலரேட்டர் சிக்கிக் கொள்வதாக டொயோட்டா கார் வாடிக்கையாளர்களிடம் இருந்து கடந்த 6 மாதங்களாக புகார்கள் வந்தன. அதையடுத்து, அமெரிக்காவில் மட்டும் கடந்த 4 மாதங்களில் 69 லட்சம் கார்களை டொயோட்டா திரும்பப் பெற்றது.
5 மாடல்களில் குறிப்பிட்ட தேதிக்குள் தயாரிக்கப்பட்ட சுமார் 11 லட்சம் கார்களை கடந்த மாதம் 28ம் தேதி திரும்பப் பெற டொயோட்டா அறிவிப்பு வெளியிட்டது. சீனா, ஐரோப்பிய நாடுகளிலும் வேறு பிரச்னைகள் குறித்து புகார் வந்த பல லட்சம் கார்களை திரும்பப் பெற்றது.
இந்த அறிவிப்புகளால் அதன் அக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலாண்டு வர்த்தகத்தில் ரூ.9,200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எனினும், வாடிக்கையாளர் நலனுக்கு முக்கியத்துவம் அளித்த அந்த முடிவுகளால், ஜனவரி முதல் மார்ச் வரையான 3 மாத வர்த்தக இலக்கு அதிகரிக்கும் என டொயோட்டா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Leave a Reply