நியூயார்க்: அமெரிக்காவின் மாஸே எனர்ஜி நிலக்கரி நிறுவனத்தை வாங்குகிறது, உலகின் மிகப்பெரிய ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான ஆர்செலர் மிட்டல்.
இதுகுறித்து வால்ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டு செய்தியில், ‘பெரும் நெருக்கடியில் உள்ள மாஸே எனர்ஜி நிறுவனத்தை வாங்க பல நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. இவற்றில் ஆர்செலர் மிட்டல் முன்னணியில் உள்ளது. இருநிறுவனங்களுக்குமான பேச்சு வார்த்தை ஆரம்ப நிலையில் உள்ளது’ என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமெரிக்க நிறுவனத்தை இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா வாங்க முயற்சிப்பதாக, கோல் இந்தியா சேர்மன் பார்த்த பட்டாச்சார்யா முன்பு தெரிவித்திருந்தார். இப்போது இந்த போட்டியில் ஆர்செலார் மிட்டல் முந்திக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
Leave a Reply